காணும் கனவுகள் மெய்ப்படும் போது வானமும் தொட்டு விடும் தூரம் தான் என்பதற்கு எடுத்துக் காட்டு சூரிய ஒளி விமானம்.
இந்த கண்டு பிடிப்பால் சாமான்யனும் அடிக்கடி விமான சவாரி செய்யும் விந்தை விரைவில் நடக்கும். அந்த விமானத்தின் பெயர் சோலார் இம்பல்ஸ்.
பெயரிலிருந்தே அது சூரிய ஒளியால் இயங்குவது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இதற்கு விசேஷ பெட்ரோல் அல்லது உயர் ரக எரிபொருள் தேவை யில்லை.
இதற்கு விசேஷ பெட்ரோல் அல்லது உயர் ரக எரிபொருள் தேவை யில்லை.
சூரிய ஒளியையே மின்சாரமாக மாற்றிக் கொள்கிற்து. அந்த மின்சாரம் விமானத்தை இயக்கப் பயன்படுத்தப் படுகிறது.
விமானத்தின் புரொப்பல்லர் களை இயக்க இந்த மின்சாரம் பயன் படுத்தப்படும்.
விமானத்தின் புரொப்பல்லர் களை இயக்க இந்த மின்சாரம் பயன் படுத்தப்படும்.
சோலார் இம்ப்ல்ஸ் விமானத்தின் இறக்கைகளின் மேற்புறம் மீது சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற சுமார் 12,000 சோலார் செல்கள் பொருத்தப் பட்டுள்ளன்.
இவ்வளவு மின்சார செல்களைப் பொருத்த நிறைய இடம் தேவை என்பதால் தான் இந்த விமானத்தின் இறக்கைகள் மிக நீளமாக உள்ளன.
இடது புற இறக்கையின் நுனியி லிருந்து வலது புற இறக்கையின் நுனி வரை இறக்கை களின் நீளம்72 மீட்டர்.
ஆனால் எடை ஒரு காரின் எடை அளவுதான். மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் (மற்ற விமானங்கள் மணிக்கு சுமார் 700 கிலோ மீட்டர் வேகத்தில் செல்பவை).
பகலில் நல்ல வெயில் அடிக்கிற நேரத்தில், இந்த விமானம் சுமார் 9000 மீட்டர் உயரத்தில் பறக்கும். மாலை நேரம் வந்ததும் 1500 மீட்டர் உயரத்தில் பறக்கத் தொடங்கும்.
அபுதாபி அல் புத்தீன் நிர்வாக விமான நிலையத்தில் இருந்து மார்ச் 9 அன்று புறப்பட்ட ‘சோலார் இம்பல்ஸ்’ 2 விமானம்,
கைதட்டல் களுடன் வெற்றிகரமாக மார்ச் 10 ஒமனில் தரை யிறங்கியது.
கைதட்டல் களுடன் வெற்றிகரமாக மார்ச் 10 ஒமனில் தரை யிறங்கியது.
அடுத்தது இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆமதாபாத் திற்கு வருகிறது. ஜூலை 2015–க்குள் அபுதாபிக்கு திரும்ப வந்து சேரும் என எதிர் பார்க்கப் படுகிறது.
இப்போதைக்கு விமான எரிபொருள் விலை சற்று குறைவு என்றாலும் வருங்காலத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடும்.
இதற்கு மாற்று தான் சூரிய ஒளி விமானம்.
இதற்கு மாற்று தான் சூரிய ஒளி விமானம்.
சூரிய ஒளி சக்தி எளிதில் கிடைக்க கூடிய மாற்று சக்தி. இதனால் விமான எரிபொருள் செலவு இல்லை.
சூரிய ஒளி விமானம் மூலம் சாமான்யனு க்கு விமானப் பயணம் கைக்கு எட்டும் தூரம் ஆகிவிடும்.
சூரிய ஒளி விமானம் மூலம் சாமான்யனு க்கு விமானப் பயணம் கைக்கு எட்டும் தூரம் ஆகிவிடும்.
இந்த விமானத்தில் இப்போதைக்கு ஒரே ஒரு விமான ஓட்டுனருக்குத் தான் இடம் உள்ளது.
இரு விமானிகள் இருக்கையுடன் விரிவு படுத்தப்பட்டு இது பயணிகள் விமானமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
அந்த நன்னாளை உலகே எதிர் பார்த்து காத்திருக்கிறது.
இரு விமானிகள் இருக்கையுடன் விரிவு படுத்தப்பட்டு இது பயணிகள் விமானமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
அந்த நன்னாளை உலகே எதிர் பார்த்து காத்திருக்கிறது.