கப்பல் கவிழ்ந்ததால் கப்பல் தலைவர் கோபம்.. யாரப்பா அது !

தமிழக சட்டசபை தேர்தலில் முதலில் சூரியனோடு கை கோர்க்கத் தான் திட்டமிட்டிருந்தார் கப்பல் தலைவர். ஆனால், இடையில் புகுந்த பம்பரக்காரர் குழப்பி விட்டார் என்பது ஊரறிந்த ரகசியம் தான். 
ஆனால், இதில் கப்பல் தலைவரை சம்மதிக்க வைத்ததில் அவரது மனைவிக்கும் அதிக பங்கு உள்ளது. 

மனைவி சொல்லே மந்திரம் என்ற கொள்கையின் அடிப்படையில் தான் தலைவர், கூட்டணி குறித்தே முடிவு எடுத்தார் என கட்சி வட்டாரத் தகவல்கள் வெளியாகின. பம்பரக்காரரும் இதனை பல மேடைகளில் பகிரங்கமாகவே சொன்னார். 

ஆனால், கப்பல் தலைவரின் கட்சித் தொண்டர்களுக்கு ஆரம்பம் முதலே இந்தக் கூட்டணியில் விருப்பம் இல்லை. இதனால் அதிருப்தியில் சிலர் கட்சியில் இருந்தும் வெளியேறினர். ஆனால் விரும்பிய கூட்டணியில் சேர்ந்தும், அவர்களுக்கு அஸ்தமனமே மிஞ்சியது வேறு கதை.

இது ஒருபுறம் இருக்க, தேர்தல் முடிவுகள் மாற்றத்தை விரும்பிய கூட்டணிக்கு மாற்றத்தை தரவில்லை. அதிலும் கப்பல் தலைவரின் தோல்வியால் அவரது கட்சித் தொண்டர்கள் ரொம்பவே அப்சட்டாம். 

இந்த மோசமான தோல்விக்கு கூட்டணி தான் காரணம் என்று குற்றம் சாட்டும் தொண்டர்கள், அந்தக் கூட்டணிக்கு தலைவரை அழைத்துச் சென்ற துணைவியார் மீது கடும் கோபத்தில் உள்ளனராம். 

இதனால் தேர்தல் பிரச்சாரங்களில் கணவரைவிட அதிக இடங்களுக்கு சென்ற மனைவி, கொஞ்ச நாட்கள் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம். 

பேசாமல் முன்னதாக திட்டமிட்டபடி சூரியனோடே கை கோர்த்திருந்தால், கவுரவமான தோல்வியாவது கிடைத்திருக்கும் என கவலைப்பட்டு வருகிறாராம்.

என்ன செய்ய கோபம் இருக்கத்தானே செய்யும் கப்பல் கவிழ்ந்தாலும் இன்சூரன்ஸ் வாங்கிடலாம் . ஆனால் இங்கு ..! இதற்க்கு எப்படி இன்சுரன்ஸ் கொடுப்பாங்கே.
Tags:
Privacy and cookie settings