படத்தலைப்பில் சாதிப் பெயரிட வேண்டாம்.. கமல் !

சபாஷ் நாயுடு தலைப்பு குறித்து நடிகர் கமல்ஹாசனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
படத்தலைப்பில் சாதிப் பெயரிட வேண்டாம்.. கமல் !
ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு மே 16ம் தேதி முதல் தொடங்க விருக்கிறது. 

இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. அப்போது கமலிடம் படத்திற்கு ஜாதிப்பெயர் வைத்திருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப் பட்டது. 

அதற்கு ஒரு குடிகாரனைப் பற்றி படமெடுத்தால் தான் மதுவிலக்கு பற்றி எடுக்க முடியும். என்ன சொல்ல வருகிறோம் என்று தெரியாமல் ஜாதிப் பெயர் என்றால் முதலில் ஜாதிப் பெயரை தெருவில் இருந்து எடுங்கள். 

பெயருக்கு முன்னாள் இருந்து ஜாதிப் பெயரை எடுங்கள். நான் எடுத்து விட்டேன் என்று பதிலளித்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து சமூக வலை தளங்களில் படத்தின் தலைப்பு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தார்கள்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், வானூர் தொகுதியின் வேட்பாளருமான ரவிகுமார் கமலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ரவிகுமார் எழுதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாதிவெறி தலை விரித்தாடுகிறது. 

முன்பு ஹரியானாவில் மட்டுமே இருப்பதாகப் பேசப்பட்ட ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சாதியின் பெயரை படத்தின் தலைப்பாகவோ பாத்திரங்களின் பெயர்களாகவோ பயன்படுத்துவது தமிழகச் சூழலை மேலும் சீரழிப்பதாகவே அமையும்.

முன்னர் அப்படி தலைப்பு வைத்து கமல்ஹாசன் எடுத்த படத்தின் பாதிப்பு இன்னும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும் போது மீண்டும் அப்படியொரு விபரீத முயற்சியில் ஈடுபட வேண்டாம் என கமல் ஹாசனைக் கேட்டுக் கொள்கிறேன்.
தலைப்பிலோ வசனங்களிலோ சாதிப் பெருமிதத்தை வெளிப்படுத்தும் திரைப்படத்துக்கு தமிழக அரசு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது என்று ரவிகுமார் வலியுறுத்தி உள்ளார்.
Tags:
Privacy and cookie settings