இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த பெண் நிசோலா தோர்ப் (27). கடந்த ஆண்டு அங்குள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வரவேற்பாளர் பணிக்கு சேர்ந்தார்.
முதல் நாளன்று அவர் உயரமான குதிகால் செருப்பு (ஹை ஹீல்ஸ்) அணியாமல் சாதாரணமான ‘ஷ¨’ அணிந்து வந்தார்.
அதற்கு நிர்வாகம் கண்டனம் தெரிவித்தது. 2 முதல் 4 அங்குலம் ஹை ஹீல்ஸ் செருப்பு அணியும்படி கட்டாயப்படுத்தியது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். உடல் நலத்துக்கு கேடு என்பதால் அணிய முடியாது என மறுத்து விட்டார்.
அதை தொடர்ந்து அவரை வேலையில் இருந்து நிர்வாகம் நீக்கி விட்டது. அதை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு கொடுத்துள்ளார். மேலும் பணிக்கு செல்லும் பெண்களின் உடை மற்றும் காலணி குறித்து சட்டம் இயற்றும்படி இங்கிலாந்து பாராளுமன்றத்தையும் வலியுறுத்தி உள்ளார்.