தேர்தலில் ஆண்களை விட பெண்களின் ஓட்டே அதிகம் !

தமிழக சட்டசபை தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் ஓட்டுப்போட்டனர். இதில் ஆண்களை விட 4 லட்சம் பெண்கள் கூடுதலாக வாக்களித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் 5 கோடியே 77 லட்சத்து 33 ஆயிரத்து 574 பேர். இவர்களில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர். 

இதில் ஆண்கள் 2 கோடியே 12 லட்சத்து 44 ஆயிரத்து 129 பேரும், பெண்கள் 2 கோடியே 16 லட்சத்து 28 ஆயிரத்து 807 பேரும் ஆவார்கள். இந்த தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிகம் பேர் வாக்களித்துள்ளனர். 

 தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், ஆண்களை விட, 10 ஆயிரம் பெண்கள் கூடுதலாக ஓட்டளித்தனர். 2014 லோக்சபா தேர்தலில், ஆண்களை விட, ஒரு லட்சம் பெண்கள் கூடுதலாக ஓட்டு போட்டனர்.

இந்த சட்டசபை தேர்தலில், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகம். எனவே, பெண் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், பெண்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டளித்தனர். 

ஆண்களை விட, 4 லட்சம் பெண்கள் கூடுதலாக ஓட்டளித்து உள்ளனர். ஆண்களை விட, பெண்களின் ஓட்டுப்பதிவு அதிகமாக இருப்பது, எந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற விவாதமும் எழுந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings