திரைப்பட நடிகை சங்கவி திருமணம் !

1993-ம் ஆண்டில் வெளிவந்த ‘அமராவதி’ என்ற படத்தில் அஜித்குமார் ஜோடியாக அறிமுகமானவர் சங்கவி. 
திரைப்பட நடிகை சங்கவி திருமணம் !
விஜய் ஜோடியாக ‘ரசிகன்,’ ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து, 

‘நாட்டாமை,’ ‘கட்டுமரக்காரன்,’ ‘லக்கிமேன்,’ ‘சேலம் விஷ்ணு,’ ‘மன்னவா,’ ‘உளவுத்துறை,’ ‘ரிஷி’ உள்பட பல படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார். 

கடந்த சில வருடங்களாக அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கி யிருந்தார். இந்தநிலையில் தொழில் அதிபர் வெங்கடேஷ் என்பவருடன் சங்கவிக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டது. 
சங்கவி - வெங்கடேஷ் திருமணம் பெங்களூரில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது. இது, காதல் திருமணம் அல்ல. 
இரண்டு பேரின் பெற்றோர்களாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம். 

திருமணத்துக்குப் பின், நான் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு என் கணவர் அனுமதி கொடுத்து இருக்கிறார் என்று சங்கவி தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings