மின்விசிறி ஆளைக்கொல்லுமா? கட்டாயம் படியுங்கள் !

உச்சி வெயிலில் உடல் வியர்த்து வந்து மின் விசிறிக்கு அருகில் அமரும் போது ஜிலு ஜிலுவென காற்று உடலை தழுவுவது தனிசுகம் தான். 


அத்தகைய குளிரூட்டும் கருவிக்கு ஆளையே கொல்லும் மறுபக்கம் இருப்பதை அறிவீர்களா?

காற்றாடி ஓடும்போது கழன்று தலையில் விழுந்து கொல்லுவது வேறு கணக்கு.

நம்மோடு கலகலவென சிரித்து பேசிக் கொண்டிருந்த நபர் பின்னர், விடைபெற்று உறங்கச் செல்கிறார். 

காலையில் அவருடைய அறைக்கு சென்று பார்க்கும் போது, அவர் படுத்திருந்த படியே காயம் ஏதுமின்றி இறந்து கிடக்கிறார்.

அங்கு மின்விசிறி மட்டுமே வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது நீங்கள் என்ன நினைப்பீர்கள்.

இதுபோல ஒன்று, இரண்டு சம்பவமல்ல நூற்றுக் கணக்கில் நடந்தால் என்ன முடிவெடுப்பீர்கள்.

பரிசோதனை யில் இறந்த வருக்கு மாரடைப்பும் ஏற்பட வில்லை என்றால் அந்த மர்ம மரணத்திற்கு யார் காரணம் நிச்சயமாக மின் விசிறி தான்.

இந்த மின்விசிறி பயம் கொரியர்களை அதிகமாகவே குலை நடுங்க வைத்திருக் கிறது என்பது கூடுதல் தகவல்.

ஓடும் மின் விசிறியோடு இரவில் தனித்திருக்க பயப்படும் அளவில் அங்கு மின்விசிறி பேய்களின் பினாமியாகவே பார்க்கப் படுகிறது.

மின்விசிறி கொலை கதைகள்:

மின்விசிறி ஆளை கொல்வது பற்றி மிகைப் படுத்தியும் கொரியாவில் கதைகள் புனையப் படுகிறது.

சினிமாக்களி லும் கதை யோட்டத்தில் திடுக்கிடும் திருப்பங்களை அமைப்பதற்கு

மின்விசிறி பயத்தை பயன் படுத்துவது அவர்களுடைய வழக்கங்களில் வந்திருக்கிறது.

மருத்துவர்களின் பல்வேறு கருத்து:

இறந்தவர்களை ஆய்வுசெய்த குழுவினரில் பல மருத்துவர்கள் மின்விசிறி மரணங்களை ஏற்றுள்ளனர்.

மேலும், மின்விசிறி ஓடுவதால் மட்டுமே ஒருவர் இறப்பதும் சாத்தியம் என்றும் அறிவித் துள்ளனர். 

சியோலில் உள்ள செவரன்ஸ் மருத்துவ மனையின் டாக்டர் ஜான் லிண்டோன் 2004 ல் ஜூன்காங் நாளிதழுக்காக கூறுகையில்,

“அறிவியல் பூர்வமாகவும் மின்விசிறி மரணங்கள் மீது சிறிய அளவில் ஆதரவு இருக்கிறது. 


ஆனால், கதவு, ஜன்னல், கூரை என எல்லாம் மூடப்பட்ட நிலையில், ஓடும் மின் விசிறியால் மட்டுமே ஒருவர் இறக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

சியோல் நேஷனல் பல்கலைக் கழகத்தின் மருத்துவமனை பேராசிரியர் யூ தாய் வூ

“மின்விசிறி ஓடுவதையும் இறந்து கிடப்பதையும் சேர்த்துப் பார்ப்பதால் மக்கள் மின்விசிறி மரணங்களை நம்புகின்றனர்.

ஆனால், ஆரோக்கியமான மனிதர்களை மின்விசிறி ஒன்றும் செய்வ தில்லை அவர்கள் நன்றாக தூங்குவார்கள்’ என 2007 ம் ஆண்டு கூறினார். கனேடிய நிபுணர் விளக்கம்:

கனேடிய நிபுணர் கார்ட் ஜீஸ்ப்ரெசிட் மின்விசிறி மரணங்கள் பற்றி ‘ஜூன்கான்’ நாளிதழுக்கு கூறியிருப்ப தாவது,

“மின் விசிறியால் இறப்பவர்கள் பெரும்பாலும் தாழ் வெப்பநிலை (ஹைபோ தெர்மியா) தாங்க முடியாத வர்களாக இருக்கலாம்.

அப்படிப்பட்டவர்களுக்கு மின்விசிறி இரவில் நீண்ட நேரம் ஓடுவதால் அதன் வெப்பநிலை 10 டிகிரி குறைந்து 28 க்கு கீழே

போகும் போது அவர்களுடைய முகத்தைச் சுற்றி ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது 

அதனால், மூச்சுத்திணறி இறக்கலாம். என கூறுகிறார். மேலும், அதையே காரணமாகக் கொண்டு பயனுள்ள ஒரு அறிவியல் கருவிமீது கொலைப்பழி சுமத்துவது சரியல்ல. 

உதாரணமாக, டிவியின் அருகில் இருந்து பார்த்தால், கண்களை பாதிக்கிறது.

அதற்காக, டிவி கண் பார்வையை பறிக்கிறது என்று ஒதுக்கிவிட முடியுமா? என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்.

அறிவியல் கூறுவதென்ன?

கொரியாவின் நகர்ப்புற மக்கள் மின்விசிறி மரணங்களை உறுதியாக நம்புகின்றனர்.

35 ஆண்டுகளாக அங்கு நிகழ்ந்த பல மரண சம்பவங்களை வைத்து ஊடகங்களும் மக்கள் கருத்தை பிரதிபலிக்க துவங்கி யுள்ளன.

ஆனால், அறிவியல் கூற்றுப்படி, மின்விசிறி மரணங்கள் வாய்ப்பில்லை என்பதுதான்.

மேலும், மின்விசிறி ஓடும் போது, வெப்பநிலை குறைகிறது என்று சொல்லப் பட்டாலும் மின்விசிறி ஓடுவதால் அதன் மோட்டார் சூடாகிறது.


அந்த வெப்பம் அறையின் காற்றலைகளில் கடத்தப் படுவதால் சமயங்களில் கொஞ்சம் அனலாகவும் வீசும்.

அது இயற்கையாக வீசும் காற்றைவிட இனிமை குறைந்த தாகவே இருக்கும். 

வெளிக்காற்று வராமல் முற்றிலும் அடைக்கப்பட்ட அறையில் மின்விசிறி ஓடினாலும்

அந்த அறையின் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரித்து ஆக்ஸிஜன் குறையவே செய்யும்.

மின்விசிறியின் வேகமான காற்றலை, திடீரென குறையும் வெப்பநிலை, அறை காற்றில் மிகும்

கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகள் ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளருக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்த லாம்.

மூட நம்பிக்கையா? நுட்பமான அறிவியலா?

மின்விசிறி ஆளைக் கொல்லும் அளவுக்கு தீங்கானது என்பதை மேலோட்டமாக கேட்கும் போது

ஒரு மூடநம்பிக்கை போல தோன்றினாலும் அதில் ஒரு நுட்பமான அறிவியல் பார்வை உள்ளது என்பதும் உண்மை தான்.

ஆரோக்கியத்தில் மனிதர்களு க்குள் ஆயிரக்கணக் கான நிலைகள் உண்டு. உச்சி வெயிலில் உழைக்க முடிந்தவனும் இருக்கிறான்.

உலா செல்லும் போதே மூர்ச்சையாகி விழுந்து முடிபவனும் இருக்கிறான். 

ஒரு அதிர்ச்சி சம்பவத்தில் பைத்திய மானவனும் இருக்கிறான். அதே அதிர்ச்சியை தாங்கிக் கொண்டு அதற்கு வைத்திய மானவனும் இருக்கிறான்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கிய மான உணவுகள் கூட விஷம் தானே அது போல,

மனிதர் களிடையே உள்ள ஆரோக்கிய பேதங்களால் மின் விசிறிகள் கூட சிலருக்கு கொலை கருவியாக மாறலாம்.

கொரியா மக்களிடமே அதிக மின்விசிறி மரணங்கள் நடந்திருப்பதால் அந்த இனத்தவர்களின்

உடல் சுபாவத்தில் மின்விசிறி பயன்படுத்து வதில் ஒவ்வாமை பொதுவாகவே இருக்கலாம்.

அது பல்வீனமானவர் களிடம் மிகுந்து வெளிப்ப டுவதால் மரணம் நேர்கிறது.


நுட்பமானவையே தீங்கை தெரியப்படுத்தும்:

நாம் எவ்வளவு வேகமாக ஓடினாலும் காற்று நம் கண்களை உறுத்துவ தில்லை.

அது இயற்கை. அதே சமயம், 80 கி.மீ. வேகத்தில் பைக்கிள் செல்லும் போது காற்று விழித்திரையை கிழிப்பது போல உறுத்தும். இந்த வேகம் செயற்கை யானது.

இதை நாம் கைகால்களில் உணர்வதை விட கண்களில் தான் வலியோடு உணர்கிறோம்.

காரணம் அதுவே நுட்பமான உறுப்பு. பாதுகாக்க கண்ணாடிகளும் அணிகிறோம்.

அது போல, மின் விசிறிகளின் தீங்கிற்கு கொரியர்கள் நுட்பமானவர் களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.
Tags:
Privacy and cookie settings