தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்குமே மெஜாரிட்டி கிடைக்காது என்று தந்தி டிவி எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.
அதிமுக 111,
திமுக 99
இடங்களில் தான் வெல்லும்;
16 தொகுதிகளில் இழுபறி என்றும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை இரு கட்சிகளும் பெறவில்லை எனவும் தந்தி டிவி எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 232 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் மே 19ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் தேர்தலுக்குப் பின்பான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரையிலான வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல்
முடிவுகளில் 4 திமுகவுக்கு ஆதரவாகவும் 1 அதிமுகவுக்கு ஆதரவாகவும் வெளியாகி உள்ளன. தந்தி டிவி தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை நேற்று வெளியிட்டது.
அதில்,
அதிமுக - 102
திமுக -79
பாமக - 1
இழுபறி - 52
என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்பான எக்ஸிட்போலை தந்தி டிவி வெளியிட்டது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்குரிய 118 இடங்கள் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இழுபறி நிலையில் உள்ள 16 தொகுதிகளில் கிடைக்கும் வெற்றி வாய்ப்பினை பொறுத்தே யாருக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவரும்.
தந்தி டிவி எக்ஸிட் போல் முடிவுகள்:
அதிமுக - 111
திமுக - 99
மக்கள் நலக்கூட்டணி - 3
பாமக - 2
பாஜக - 1
இழுபறி - 16
வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகள் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெல்லும் வாய்ப்புள்ள தொகுதி விவரங்களையும் தந்தி டிவி வெளியிட்டுள்ளது.
வேதாரண்யம் தொகுதியில் பாஜக வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், பாமகவிற்கு பென்னகரம், ஆற்காடு தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தந்தி டிவி வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி உளுந்தூர்பேட்டை, பவானிசாகர், தளி ஆகிய தொகுதிகளில் வெல்லும் என்றும் இழுபறி நிலையில் 16 தொகுதிகள் உள்ளதாகவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.