ஃபேஸ்புக்கில் ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தால் உஷார் !

மது ஷா என்ற பெண்ணிடம் இருந்து ஃபேஸ்புக்கில் ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தால் ஏற்க வேண்டாம் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது. ஃபேஸ்புக்கில் மது ஷா என்ற பெண்ணிடம் இருந்து 
பலருக்கு ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் வருகிறது. அந்த பெயரில் ஒரு பெண்ணும் இல்லை இது ஏதோ மோசடி வேலை என்று ஒருவர் நெட்டிசன்களை எச்சரித்துள்ளார்.

மது ஷா என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் மொத்தம் 27 கணக்குள் உள்ளது. அத்தனை கணக்குகளிலும் ஒரே பெண்ணின் புகைப்படம் தான் உள்ளது. 

ஒரு நபரே எப்படி ஃபேஸ்புக்கில் இத்தனை கணக்குகளை துவங்கினார் என்பது தெரியவில்லை. அவர் எதற்காக போலி கணக்குகள் துவங்கி பலருக்கு ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்புகிறார் என்பதும் புரியவில்லை. 

மது ஷாவிடம் இருந்து ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் வந்தால் ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஏற்கனவே அவரது ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட்டை ஏற்றுக் கொண்டவர்கள் உடனே மது ஷாவை பிளாக் செய்யுங்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings