சவூதி அரேபியாவின் விமானம் இரண்டு வகையான மனிதநேய பணிகளை செய்து உலக மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திற்கு சென்ற விமானத்தில் 6 மாத இந்திய குழந்தைக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது.
விமானத்தில் உள்ள மருத்துவக் குழுவினர் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர், மூச்சு திணறல் நிற்காததால் விமானிக்கு தகவல் கொடுத்தனர்.
சவூதி அரேபியாவை நோக்கி பயணித்த விமானத்தை 6 மாத குழந்தையின் உயிரை கவனத்தில் கொண்டு ஓமன் தலைநகர் மஸ்கட்டில் விமானத்தை தரை யிறக்கினார்.
மஸ்கட்டில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தேவையான மருத்துவ உதவிகள் செய்து குழந்தையோடு விமானம் மீண்டும் சவூதியை நோக்கி புறப்பட்டது.
சவூதி அரேபியாவின் ஹெயில் நகரிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த 17 வயது இளைஞர் ஒருவர் தம்முடைய புற்றுநோய் மருந்துகளை மறதியாக வைத்து விட்டு வந்ததாகவும்,
மருந்துகள் இல்லையென்றால் தம்முடைய உயிருக்கு ஆபத்து என்று கூறியவுடன் விமானி சிறிதும் யோசிக்காமல்,
உலக வரலாற்றில் முதன் முறையாக புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் விமானத்தை கொண்டு வந்து இறக்கினார்.
இதனால் 50 நிமிடம் விமான பயணம் தாமதம் ஆனாலும் ஒரு மனிதரின் உயிரே மிக முக்கியம் என்று விமானி மட்டுமில்லாமல் விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டனர்.
விமானிகளின் மனிதநேய பணிகளை பாராட்டும் விதமாகவும், ஊக்கப்ப டுத்தும் விதமாகவும்,
அவர்களுக்கு பாராட்டு பத்திரமும், ஊக்கத் தொகையும் வழங்கப் போவதாக சவூதி அரேபிய விமான நிறுவனம் அறிவித்துள்ளது. தகவல் உதவி : மௌலவி செய்யது அலி ஃபைஜி