ரயிலில் பயண பெட்டியை தவற விட்ட வாலிபர் !

ஜேர்மனி நாட்டில் பயணிகள் ரயில் ஒன்றில் பெட்டியை தவற விட்ட வாலிபர் ஒருவர் அதனை மீட்பதற்காக எடுத்த விபரீத முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.
ரயிலில் பயண பெட்டியை தவற விட்ட வாலிபர் !
மேற்கு ஜேர்மனியில் உள்ள Hamm என்ற ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் ஒன்று புறப்பட தயாராக இருந்துள்ளது.

ஆனால் ரயில் நின்றதுக்கு சற்று முன்னர் 20 வயதான வாலிபர் ஒருவர் ரயிலில் இருந்து இறங்கி யுள்ளார்.

அப்போது, பயணப் பெட்டிகளை ரயிலிலேயே தவற விட்டு விட்டோமே என திடீரென ஞாபகம் வந்துள்ளது, 

ரயிலை நோக்கி வாலிபர் திரும்ப ஓடிய போது அந்த ரயிலின் கதவுகள் மூடப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றுக் கொண்டு இருந்துள்ளது.

இருப்பினும் முயற்சியை கைவிடாத அந்த வாலிபர் ரயிலை பின் தொடர்ந்து ஓடிச் சென்று, ரயிலின் பின்புறத்தில் உள்ள ஒரு இரும்பு கம்பியின் மீது ஏறி நின்றுள்ளார். ரயில் வேகம் பிடித்துள்ளது.
வாலிபர் அசராமல் இரும்பு கம்பியில் தொங்கியவாறு தனது பிடியை விடாமல் தொடர்ந்து சென்றுள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு, அருகில் உள்ள தண்ட வாளத்தில் மற்றொரு ரயில் பயணமாகி யுள்ளது.

அப்போது, அந்த ரயிலின் ஓட்டுனர் எதிரே உள்ள ரயிலின் பின்புறத்தில் ஒருவர் தொங்கிக் கொண்டு செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அந்த ரயிலின் ஓட்டுனருக்கு தகவலை அனுப்பி யுள்ளார்.

தகவலை பெற்ற அந்த ஓட்டுனர் உடனடியாக அவசரகால பிரேக்கை(Break) செயல்படுத்தி ரயிலை நிறுத்தி யுள்ளார். பொலிசாருக்கு தகவலுக்கு அனுப்பப்பட்டு வாலிபர் கைது செய்யப் பட்டார். 
‘பயணப் பெட்டியை எடுக்க தான் இவ்வாறு ரயிலின் பின்புறத்தில் நின்றுக் கொண்டு சென்றதாக’ வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும், பிற பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயன்ற குற்றத்தின் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings