அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 2 குழந்தைகளுக்கு தாயான கல்யன் டோலன் தனது தாயாரின் இறுதிச்சடங்கு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.
அப்போது அவரை பயர் ஆண்ட்ஸ் (Fire Ants) எனப்படும் ஒருவகை எறும்பு கடித்துள்ளது. திடீரென்று ஏராளமாக எறும்புகள் குவிந்து அவைகள் அனைத்தும் ரோலன் உடம்பில் ஊர்ந்து ஏறியதுடன் கடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரை மீட்கும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர், ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியவே ரோலன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் Rolan மற்றும் அவரது தாயாருக்கும் சேர்த்து இறுதிச்சடங்கினை நிறைவேற்ற உறவினர்கள் முடிவு செய்து நிதி திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
தற்போதுவரை அந்த குடும்பத்தினருக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அலபாமா பகுதியில் மஞ்சல் குளவியால் 3 நபர்களும்,
பாம்பு கடித்து ஒருவரும் இறந்துள்ளார்கள். ஆனால் எறும்பு கடித்து ஒருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதன் முறை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.