ஓட்டல்களில் அதுவும் பெரிய ஓட்டல்களில் சாப்பாட்டை எப்படி சாப்பிடுவது என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அவை:
கத்தி, முள் கரண்டிகளுடன் சாப்பிடும்போது கத்தியை வலது கையிலும், முள் கரண்டியை இடது கையிலும் பிடித்துக் கொள்ள வேண்டும்.
ஐஸ்கிரீமை கரண்டியால் எடுக்கும் போது உங்கள் பக்கமாக வெட்ட வேண்டும்.
சூப்பாக இருந்தால் எடுக்கும் போது கை உங்கள் புறத்தி லிருந்து எதிர்ப்புறமாகப் போக வேண்டும்.
சூப்பாக இருந்தால் எடுக்கும் போது கை உங்கள் புறத்தி லிருந்து எதிர்ப்புறமாகப் போக வேண்டும்.
சூடான பொருளை வாயால் ஊதிச் சாப்பிடக் கூடாது.
கப்பில் காபி சாப்பிடும்போது அதன் காதைக் கட்டை விரலாலும் மற்ற விரல்களாலும் இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
ஆள்காட்டி விரலை அதன் காதில் நுழைத்துக் கொள்வது அநாகரிகம்.
ஆள்காட்டி விரலை அதன் காதில் நுழைத்துக் கொள்வது அநாகரிகம்.
சாப்பிடும்போது உங்கள் உதடுகள் மூடியே இருக்க வேண்டும். முழங்கையை மேஜை மீது ஊன்றிக் கொள்ளக் கூடாது.
ஸ்பூனைக் காலியான கப்பிற்குள் வைக்கக் கூடாது. சாஸர் மீது தான் வைக்க வேண்டும்.
சாப்பிட்டு முடித்த பிறகு கத்தியையும் முள் கரண்டியையும் சேர்ந்தாற் போல் தட்டின் நடுவில் உங்கள் பக்கம் இருக்கும்படி வைக்க வேண்டும்.
ஸ்பூனில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஐஸ்கிரீமை நக்கக் கூடாது.
மீன் முள் அல்லது சிறிய எலும்பு வாயில் மாட்டிக் கொண்டால் வாயில் விரலை விட்டு எடுக்கலாம். இது மட்டும் பரவாயில்லை.