திருமணமான பத்தாவது நாளில் கணவரை பிரிய முடிவு செய்தேன் என பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா தெரிவித்துள்ளார். பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ரம்யா சென்னையைச் சேர்ந்த
அபராஜித் ஜெயராமன் என்பவரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரே ஆண்டில் அவர் கணவரை பிரிந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து ரம்யா கூறுகையில்,
நான் ஜோடி ஃபினாலே நிகழ்ச்சியில் மலேசியாவில் இருந்தபோது தான் என் விவாகரத்து பற்றி ட்விட்டரில் தெரிவித்தேன்.
நான் ஏன் என் கணவரை பிரிகிறேன் என்பதற்கான காரணத்தை நான் கூறப் போவது இல்லை. ஆனால் பலரும் பல காரணங்களை கணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.
ஓ காதல் கண்மணி படத்தில் நான் நடித்ததை என் கணவரும், அவரும் குடும்பத்தாரும் விரும்பவில்லை என்றும்,
அதனால் தான் நாங்கள் விவாகரத்து பெறுவதாகவும் சில இணைய தளங்கள் மற்றும் செய்தித் தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது உண்மை இல்லை.
எனக்கு 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பத்தாவது நாளே கணவரை பிரிவது என்று முடிவு செய்தேன்.
அதற்கான காரணத்தை தெரிவிக்க விரும்பவில்லை. என் திருமணம் சரியான பாதையில் செல்லவில்லை என்பதை உணர்ந்து என் தாய் வீட்டிற்கு சென்று விட்டேன்.
மணிரத்னம் சாரின் படத்தில் நடிக்க செப்டம்பர் மாதம் வாய்ப்பு கிடைத்தது. அந்த மாதத்திலேயே படப்பிடிப்பும் துவங்கியது. அதாவது என் கணவரை பிரிந்து 7 மாதங்கள் கழித்து தான் படத்தில் நடித்தேன்.
திருமணமான பத்து நாட்களில் பிரச்சனை ஏற்பட்டது. எங்கள் திருமணம் சரியான பாதையில் செல்லவில்லை என்பதை உணர்ந்தோம். அதை சரிய செய்ய முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை.
சினிமா படத்தில் நடிக்க நான் திருமணம் செய்யும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை. நான் 19 வயதில் இந்த துறைக்கு வந்தேன், தற்போது என் வயது 28.
இத்தனை ஆண்டுகளில் நான் படங்களில் நடித்திருக்கலாம். எனக்கு நிறைய வாய்ப்புகளும் வந்தன. ஆனால் என் பெற்றோருக்கு அது பிடிக்காததால் அவர்களின் முடிவை மதித்து நடிக்கவில்லை.
படத்தில் நடித்தது தான் விவாகரத்துக்கு காரணம் என்று நினைத்தால் ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு எனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தும் நான் அவற்றை ஏற்கவில்லை.
அதனால் அந்த காரணம் உண்மை அல்ல. பிரிவு எப்படி என் திருமணத்தை அனைவருக்கும் அறிவித்தேனோ அதே போன்று விவாகரத்தையும் அறிவித்தேன்.
விவாகரத்து தொடர்பான சட்ட வேலைகளும் முடிந்து விட்டது. நாங்கள் ஒன்றும் சண்டை போட்டு பிரியிவில்லை. சமாதானமாக பிரிந்து விட்டோம். நான் அவரிடம் ஜீவனாம்சம் கேட்கவில்லை.
இது பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம். இதுவே காதல் திருமணமாக இருந்திருந்தால் நான் அவரையும், அவர் என்னையும் புரிந்து கொண்டிருப்பார்.
அவர் திருமணத்திற்கு முன்பு லண்டனில் இருந்தார். திருமணம் முடிந்து இருவரும் சேர்ந்து வாழத் துவங்கிய போது தான் இது ஒத்து வராது என்பது தெரிய வந்தது.
இரு வீட்டாருக்கும் இந்த திருமணம் வேலைக்கு ஆகாது என்பது புரிந்தது. நடிப்பு மணி சார் படத்திற்கு பிறகு சினிமா படங்களில் எனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிப்பது என முடிவு செய்தேன்.
அதனால் படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். முழு நேரமும் படத்தில் நடிப்பதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றார் ரம்யா.