அமெரிக்காவின் தேசிய விலங்கு காட்டெருமை !

அமெரிக்காவின் தேசிய விலங்காக காட்டெருமை அறிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் காட்டெருமை களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. 
அமெரிக்காவின் தேசிய விலங்கு காட்டெருமை !
இதனால் அந்நாட்டில் அருகி வரும் இனமாக காட்டெருமை ஆகி விட்டது. இந்நிலையில், காட்டெருமையின் முக்கியத்தை எடுத்துக் கூறும் வகையில் அதனை அமெரிக்காவின் தேசிய விலங்காக அறிவித் துள்ளார் 

அந்நாட்டு அதிபர் ஒபாமா. காட்டெருமை இனத்தின் முக்கியத்து வத்தை உணர்த்தவும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ள தாக அவர் தெரிவித் துள்ளார்.

கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் மிஸ்ஸிஸிப்பி மாநிலம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் லட்சக் கணக்கில் இருந்த காட்டெருமை தற்போது பெருமளவில் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

பெரும்பாலும் வேட்டையாடப் படுவதனாலேயே காட்டெருமைகள் இனம் அங்கு குறைந்து வருகிறது. 
எனவே, காட்டெருமையின் பாரம்பரியம், அவற்றினால் கிடைக்கும் பொருளாதாரம் போன்றவை குறித்து அதிக கவனம் செலுத்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

அதன்ப்டி, எல்லோஸ்டோன் என்ற பூங்காவில் காட்டெருமை களின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்தவும் அந்நாட்டு அரசு திட்ட மிட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings