கணவரின் மீசை பிடிக்காததால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுத்தரும்படி தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவை சேர்ந்த இளம்பெண் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணமான அந்த இளம்பெண், இதுதொடர்பாக தலைநகர் அல்ஜீயர்ஸ் நகரில் உள்ள கோர்ட்டில் ஆஜராகி நீதிபதியின் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.
திருமணத்துக்கு பின்னர் மீசையை எடுத்து விடுவதாக அவர் அளித்த வாக்குறுதியை நம்பி அவரை கணவராக ஏற்றுக் கொண்டேன். ஆனால், மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் அவர் மீசையை எடுக்கவில்லை.
தற்போது, மீசையை இழக்க விருப்பமில்லை என்றும் அவர் கூறிவருகிறார். எனவே, அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து பெற்றுத் தாருங்கள் என நீதிபதியிடம் அந்த இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளத்காக தகவல்கள் தெரிவிக்கின்றன.