வலி மாத்திரையை தாய்ப்பாலில் கலந்து கொடுத்த கொடுரமான தாய் !

1 minute read
பெற்ற தாயே தனது குழந்தைக்கு கடந்த 6 மாதங்களாக தாய்ப்பாலில் விஷத்தைக் கலந்து கொடுத்த அதிர்ச்சிச் சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. 
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ரோஸ் ஜோன்ஸ் (30). சமீபத்தில் இவர் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். 

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அக்குழந்தையின் உடலில் மெல்ல மெல்லக் கொல்லும் விஷம் கலந்து இருந்ததைக் கண்டு பிடித்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ரோஸ் ஜோன்ஸ், கடந்த ஆறு மாதங்களாக டிரக் தெர்மடோல் என்ற 

வலி நிவாரண மாத்திரையை தாய்ப்பாலில் கலந்து குழந்தைக்கு கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

தனது குழந்தையை ஒரேடியாக கொன்று விடாமல் படிப்படியாக கொல்ல திட்டமிட்டு இவ்வாறு செய்ததாக போலீசாரின் விசாரணையில் ரோஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான வழக்கு பிளேமவுத் கம்பைண்ட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்கை விசாரித்த நீதிபதி, இது மிகவும் சிக்கலான வழக்காக உள்ளது என்றும் அப்பெண்ணை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளார். 

கலப்படமே இல்லாதது தாயின் பாசமும், தாய்ப்பாலும் என்பது காலங்காலமாகக் கூறப்பட்டு வருகிறது. 

ஆனால், பெற்ற தாயே குழந்தைக்கு தாய்ப்பாலில் விஷத்தைக் கலந்து கொடுத்த சம்பவம் இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சுவையான டொமேட்டோ சாஸ் செய்வது எப்படி?

தற்போது பிரச்சினையில் சிக்கியுள்ள ரோஸ் ஏற்கனவே, தனது வீட்டில் தனக்குத் தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றவர். 

இதேபோல், வேறொரு நபரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தினை கையாடல் செய்தார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings