துடைப்பத்தை வைத்து செக்ஸியான செய்கைகளைச் செய்ததாக கூறி ஒரு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் பதவியை விட்டும் நீக்கப்பட்ட ஆசிரியை சதி வலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கோர்ட் கூறியுள்ளது.
வகுப்பறையில் துடைப்பத்தை வைத்து சுய இன்பம் அனுபவிப்பது போல அவர் செயல்பட்டு மாணவர்களிடையே அந்தப் பழக்கத்தை தூண்டி விட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் நடந்தது 2004ம் ஆண்டாகும். இவர் 2006ம் ஆண்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஆனால் தனது நீக்க உத்தரவை எதிர்த்து கோர்ட்டில் வழக்குப் போட்டார்.
அந்த ஆசிரியை. அந்த வழக்கை விசாரித்த கோர்ட், ஆசிரியை சதி வலையில் சிக்க வைக்கப் பட்டிருக்கலாம் என்று கருதுவதால், ஆசிரியை தனது நீக்கத்தை எதிர்த்து சட்ட ரீதியாக போராடலாம் என்று கூறியுள்ளது.
அந்த ஆசிரியையின் பெயர் பாட்ரிசியா இஸபெல்லா டேவிஸ். இவர் அறிவியல் ஆசிரியை ஆவார்.
மேற்கு மிட்லேண்ட்ஸில் உள்ள டிப்டன் நகரில் உள்ள வில்லிங்ஸ்வொர்த் உயர்நிலைப் பள்ளியில் இவர் பணியாற்றி வந்தார்.
ஒரு முறை உராய்வு குறித்த பாடத்தை நடத்தியபோது துடைப்பத்தை எடுத்து அதை வைத்து செயல்முறை விளக்கம் காட்டினார்.
ஆனால் ஆசிரியையின் செயல்பாடு, சுய இன்பப் பழக்கத்தை உணர்த்துவது போல இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து 2006ம் ஆண்டு இவரை டிஸ்மிஸ் செய்து விட்டனர். இதனால் வெகுண்ட ஆசிரியை வழக்குப் போட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது, ஆசிரியையின் செயல் குறித்து மாணவர்கள் கொடுத்த வாக்குமூலங்கள் முரண்பாடாக இருந்ததாக கூறியுள்ளது.
எனவே ஆசிரியையை சதி செய்து பதவியிலிருந்து நீக்கியிருக்கலாம் என்று கருத வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனவே தனது நீக்கத்தை எதிர்த்து ஆசிரியையே கூட நேரடியாக வாதிடலாம் என்றும் அவருக்கு ஆதரவாக உத்தரவிட்டுள்ளது.