மழை வேண்டி தவளைக்கும், தவளைக்கும் திருமணம் !

கர்நாடக மாநிலத்தில் மழை வேண்டி வருண பகவானின் மனதை குளிர வைக்க தவளைக்கும், தவளைக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 

மழை வேண்டி தவளைக்கும், தவளைக்கும் திருமணம் !
பருவ மழை பொய்த்து விட்டதால் பல்வேறு மாவட்டங்களில் கடும் தண்ணீர் பற்றாக் குறையாக உள்ளது. 

விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் கண்ணீர் வடிக்கிறார்கள்.மக்கள் குடிக்க நீரின்றி அல்லாடுகிறார்கள்.

தலைநகர் பெங்களூரில் தண்ணீர் லாரிகளை நம்பி மக்கள் வாழ்க்கை நடத்தும் நிலை உள்ளது. இந்நிலையில் வருண பகவானின் மனதை குளிர வைக்க மக்கள் ஒன்றை செய்துள்ளனர். 

மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஹோசஹள்ளி மற்றும் ரமணஹள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தவளைக்கும், தவளைக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். 
அவ்வாறு செய்தால் வருண பகவானின் மனம் குளிர்ந்து மழை பெய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை. 

இந்த ஆண்டு பருவமழை காலத்தில் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டதை நினைத்து தான் மக்கள் நம்பிக்கையோடு நாட்களை நகர்த்தி வருகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings