வேன்காரர்களுடன் மோதிய அரவாணியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் போலீஸார். அங்கு அரவாணியுடன் வந்த ஆட்டோ டிரைவரை போலீஸார் அடித்ததால், ஆவேசமடைந்த அந்த அரவாணி,
என் புருஷனையே அடிக்கிறீர்களா என்று கேட்டு டிரஸ்ஸை கழற்றிப் போட்டு டான்ஸ் ஆடத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தங்கள் மீது நாளைக்கு பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காக அந்த அரவாணியின் செயலை போலீஸார் வீடியோவில் படம் பிடித்து வைத்துக் கொண்டனர்.
வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த அரவாணி ஒருவர் ஆட்டோ டிரைவருடன் ஆட்டோவில் பெரியகுளம் போய்க் கொண்டிருந்தார்.
கொடைரோடு பகுதியில், ஆட்டோ வந்த போது எதிரே வந்த வேன் ஒன்று மோதுவது போல சென்றதால், அரவாணி வேனில் இருந்தவர்களைத் திட்டினார்.
இதையடுத்து வேனில் வந்தவர்கள் வேனை நிறுத்தி விட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை யடுத்து அந்த அரவாணி தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்குப் போனைப் போட்டார். போலீஸார் விரைந்து வந்தனர்.
வேனில் வந்தவர்களையும் திருநங்கை மற்றும் ஆட்டோ டிரைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு விசாரணை நடந்தது. அப்போது அத்தனை பேரையும் போலீஸார் அடித்ததாக தெரிகிறது. இதைப் பார்த்த அந்த அரவாணி ஆட்டோ டிரைவர் என் புருஷன்.
அவரை அடிப்பீர்களா என்று கேட்டு டிரஸ்ஸை கழற்றிப் போட்டு விட்டு தாறுமாறாக டான்ஸ் ஆட ஆரம்பித்தார். இதைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே தங்களிடமிருந்த வீடியோ கேமராவை எடுத்து தங்களது பாதுகாப்புக்காக அந்த அரவாணியின் செயலை வீடியோ எடுத்தனர்.
இதைப் பார்த்த அரவாணி கேமரா முன்பு நின்று கொண்டு டான்ஸ் ஆடினார். மேலும் வெளியில் போயும் டான்ஸ் ஆடினார்.
இதனால் ஊரே கூடி விட்டது. இதையடுத்து போலீஸார் அந்த அரவாணியை சமாதானப்படுத்தி உள்ளே கூட்டிச் சென்று ஆடையை அணிய வைத்து அறிவுரை கூறி அத்தனை பேரையும் அனுப்பி வைத்தனர்.
இந்த அரவாணி ஆடையைக் கழற்றி இப்படி நடந்து கொள்வது இது முதல் முறையில்லையாம். ஏற்கனவே சில தடவை அப்பகுதியில் செய்துள்ளாராம்.