ஃபாரின் லாங்குவேஜ் கோர்ஸ்… பலே வருமானம் !

இன்று பெருகி வரும் எம்.என்.சி நிறுவனங்களில், மொழி பெயர்ப்பாளர் களுக்கான வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன. 
இந்த நிறுவனங் களுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங் களுடனான தொழில் தொடர்புகளுக்கு,

ஜெர்மன், ஃபிரெஞ்சு, சைனீஸ், ஜாப்பனீஸ், அராபிக் மொழி கற்றவர்களின் தேவை அத்தியாவசிய மாகிறது.


எனவே, ஒரு ஃபாரின் லாங்குவேஜ் கோர்ஸ் உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் வேலை வாய்ப்புக்கான உத்தர வாதத்தைத் தரும் காலம் இது! ”உண்மை தான்!” 

என்று பலமாக சப்போர்ட் செய்யும் சென்னை, வருமான வரித்துறையின் டிரெயினிங் அசிஸ்டென்ட் கமிஷனர் அனுராதா, அது பற்றிய விரிவான தகவல்களைத் அளித்தார். 

”எம்.என்.சி நிறுவனங்களில், பன்னாட்டு நிறுவனத் தொடர்புகளுக் கான மெயில், உரையாடல்

போன்றவற்றை மொழி பெயர்க்க, வெளிநாட்டு மொழி கற்றவர்களின் பங்களிப்பு அவசியம்.

அனைத்து சர்வீஸ் புரொவைடர் நிறுவனங்களிலும் இந்த மொழிபெயர்ப்பு வேலைக்கான தேவை இருப்பதால்,

ஆரம்ப சம்பளமாக குறைந்தது 20,000 ரூபாயில் இருந்து அங்கெல்லாம் இவர்களுக்கான வாய்ப்பு நிறைந்துள்ளது!”

என்ற அனுராதா, கற்றுக் கொள்ள வேண்டிய வெளிநாட்டு மொழிகள் பற்றிய தகவல்கள் அளித்தார்.

”பொதுவாக தென்னிந்தி யர்களுக்கு ஆங்கிலம் பரிச்சயமான மொழி என்பதால், எழுத்து, இலக்கணம், உச்சரிப்பு

உள்ளிட்ட அம்சங்களில் ஆங்கிலத்தை ஒத்திருக்கும் ஃபிரெஞ்சு, ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழிகளை குறைந்த காலத்தில்…

இரண்டு மாதத்தில் கூட கற்றுக் கொள்ளலாம். 

பின் அந்த மொழிகளில் எவ்வளவு வார்த்தைகளை நினைவில் கொள்கிறோம் என்பதைப் பொறுத்து,

ஐரோப்பிய மொழிகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியும். ஆர்வம்,

விடாமுயற்சியுடன் படித்தால் ஒரே வருடத்தில் ஐரோப்பிய மொழிகளுக் கான சிறப்பான மொழி பெயர்ப்பாளராக உருவாக முடியும். 
இம்மொழிகளுக்கு அண்ணா பல்கலை க்கழகத்தில் லாங்குவேஜ் கோர்ஸ்கள் உள்ளன. ஸ்டடி மெட்டீரியல் களும் எளிதில் கிடைக்கின்றன!” என்றவர்,


”சைனீஸ், ஜாப்பனீஸ், அராபிக் போன்ற மொழிகள் கற்றுக்கொள்ள கொஞ்சம் கடினமானவை. 

ஆங்கிலத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இம்மொழிகளின் எழுத்துகள் சித்திர வடிவில் இருப்பதுடன், அராபிக் மொழியை இடமிருந்து வலமாக எழுத வேண்டும்.

இந்த மொழிகளைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ள ஆறு மாதங்கள் ஆகும்.

பின் பத்தாயிரம் வார்த்தைகளை நினைவில் நிறுத்தி அர்ப்பணிப்புடன் படித்தால், இரண்டு, மூன்று வருடங்களில் சிறப்பான மொழி பெயர்ப் பாளராகலாம்.

சைனீஸ் மொழியைப் பொறுத்தவரை, நான்கு லெவல்களில் சர்டிஃபிகேட் கோர்ஸ்கள் கற்றுத்தரப் படுகிறது.

அந்தப் பயிற்சியை முடித்த பின், இந்தியாவில் இருக்கும் சீன தூதரகத்தில் தொடர்ந்து பட்டப் படிப்பாகவே சைனீஸ் மொழி படிக்கலாம்!” என்று பூஸ்ட் தந்து முடித்தார் அனுராதா. 

சென்னை, அசோக் நகரில் உள்ள ‘கன்பூஷியஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைனீஸ் பிரைவேட் லிமிட்டட்’ன் சீஃப் ஆபரேட்டிங் ஆபீஸர் மகேஷ்,

சீன மொழி பற்றிய மேலதிக தகவல்களும், வேலை வாய்ப்புகளும் பற்றிப் பேசினார். 

”காண்டோனீஸ், மாண்ரைன் என சைனீஸ் மொழியில் இரண்டு பிரிவுகள் உண்டு.

இவற்றில் எங்கள் இன்ஸ்டிட்யூட்டில் கற்றுத் தருவது, மாண்ரைன் சைனீஸ்.

சிங்கப்பூர், சீனா, மலேசியா போன்ற நாடுகளில் மாண்ரைன் மொழியே அதிகம் பேசப்படுகிறது.

சிங்கப்பூரின் உத்தியோகபூர்வ மொழியான இந்த மாண்ரைன் சைனீஸ், உலகில் அதிகம் பேசப்படும் மொழி என்பதும் குறிப்பிடத்தக்கது. 
ஸ்போக்கன், ரீடிங் அண்ட் ரைட்டிங் என்று இம்மொழியை நாங்கள் இரண்டு லெவல்களில் பயிற்று விக்கிறோம்” என்றவர்,

ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான நிறுவனங் களிலும், வேலை வாய்ப்புகளிலும்,


தொழில் களிலும் இருப்பவர்கள் அதிகம் பேர் இன்று மாண்ரைன் சைனீஸ் படிக்கிறார்கள். 

பொறியியல் மாணவர்கள் பலர் இம்மொழிப் பயிற்சிக்கு வருகிறார்கள்.

காரணம், வெளிநாடு வேலை வாய்ப்புகளுக்கு, இம்மொழி ரெஸ்யூமில் இணைந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்பது தான். 

மேலும், இந்தியாவில் இருக்கும் தொழிற் சாலைகளுக்கு சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் மெஷினரீஸ்களின் இயக்கத்தை,

இங்குள்ளவர் களுக்குக் கற்றுத் தர சீனாவில் இருந்து பயிற்சி யாளர்கள் வருவார்கள்.

ஆங்கிலம் அறியாத அவர்களிடமிருந்து, நம்மவர்களுக்கு அந்தப் பயிற்சியை மொழிபெயர்த்துச் சொல்ல,

மாண்ரைன் மொழி தெரிந்தவர்களின் தேவை அவசியம். இவர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் ஐந்தாயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப் படுகிறது. 

மேலும், டாக்குமென்ட்ஸ் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு ஒரு வார்த்தைக்கு ஐந்து ரூபாய் வரை செலுத்தப் படுகிறது” என்ற மகேஷ்,

”வளர்ந்து வரும் வேலை வாய்ப்பை வசப்படுத்திக் கொள்ள, வெளிநாட்டு மொழி ஒன்றை கற்பது காலத்தின் அவசியம்!” என்று முடித்தார்.
Tags:
Privacy and cookie settings