சட்டசபையில் தி.மு.க. கம்பீரமாக ஒலிக்கும் !

தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகளுக்காக சட்டசபையில் எங்களது குரல் வேகமாகவும், கம்பீரமாகவும் ஒலிக்கும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். 
தஞ்சாவூர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ''தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதியில் நடைபெறும் தேர்தலை பாதிக்காது என்று கூறினார்.

அங்கு முறையாக தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறிய ஸ்டாலின், தமிழக சட்டசபையில் ஏற்கனவே 23 தி.மு.க. உறுப்பினர்கள் இருந்தோம். அப்போதும் சட்டமன்றத்தில் எங்களுடைய கடமையை ஆற்றினோம். 

தற்போது தி.மு.க.வுக்கு பெருவாரியான வெற்றி கிடைத்து அதிக பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருக்கின்றோம். வலிமை மிகுந்த எதிர்கட்சியாக தமிழக சட்டப்பேரவையில் அமர்ந்து ஜனநாயக முறைப்படி கடமை ஆற்றுவோம். 

இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகளுக்காக சட்டசபையில் எங்களது குரல் வேகமாகவும், கம்பீரமாகவும் ஒலிக்கும் என்றும் தெரிவித்தார். 

சாதிக் பாட்ஷா மரணத்தில் முறையான சி.பி.ஐ. விசாரணை வேண்டும். தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு துணையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
Tags:
Privacy and cookie settings