சட்ட கல்லூரி தலித் மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரள மாநிலத்துக்கே அவமானம் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம், பெரும்பாவூரில், சட்டக்கல்லூரி தலித் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு
கொடூரமான முறையில் அவரது குடல் உருவப்பட்டு கத்தியால் பல இடங்களில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக 5-க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், மாணவி கொலை குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குபடி மாநில அரசுக்கும்,
பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையம் என்பன உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பின் முதல்வர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது,
‘மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவியின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடிவு செய்து உள்ளோம்.
மாணவியின் சகோதரிக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்,
நாங்கள் தேவையானதை செய்வோம். இந்தச் சம்பவம் கேரள மாநிலத்திற்கே அவமானம் ஆகும்” என்றார்.