என் குழந்தை என்னைப் போல் இருக்க கூடாது !

நடிகை நஸ்ரியா, தன்னுடைய குழந்தை என்னைப் போல் இருக்கக் கூடாது என்றும் என்னுடைய கணவர் போல் இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 
என் குழந்தை என்னைப்போல் இருக்க கூடாது !
தமிழ் பட உலகில் காலடி எடுத்து வைத்த நஸ்ரியா, பிரபலமாகும் நிலையில் திருமணம் செய்து கொண்டு பட உலகில் இருந்து விலகினார்.

மலையாள நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்க வில்லை. நஸ்ரியா விரும்பினால் நடிக்கலாம். அதற்கு நான் தடை போடவில்லை என்று பகத்பாசில் அறிவித்துள்ளார்.

என்றாலும், நஸ்ரியா குடும்ப வாழ்க்கையில் தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இது பற்றி கூறியதாவது–

பகத் எனது அன்பான கணவர் மட்டுமல்ல, அவரது பெற்றோருக்கும் நல்ல மகனாக இருக்கிறார். தங்களுடைய 4 பிள்ளைகளில் பகத் பாசில்தான் நல்ல பிள்ளை என்று மாமியார் கூறுவார்.
நான் குழந்தையாக இருந்த போது அதிகமாக குறும்பு செய்வேன். ஆனால் என் குழந்தைகள் என்னைப் போல் இருக்க கூடாது. 

பகத்போல நல்ல சமத்தான பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம் என்றார் அவரது ஆசை நிறைவேற்றட்டும்.
Tags:
Privacy and cookie settings