செல்ஃபி எடுப்பவர்களின் வாழ்க்கை பாதிப்பு என்?

செல்ஃபி நம் அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகி இருக்கிறது. எந்த வொரு கொண்டாட்ட மாக இருந்தாலும் அதை செல்ஃபிக்கள் இல்லாமல் யாரும் இப்போது கொண்டாடுவ தில்லை. 


சந்தோஷமாக இருந்தாலும் செல்ஃபி, சோகமாக இருந்தாலும் செல்ஃபி, குழப்பத்தில் இருந்தாலும்

செல்ஃபி, சிரித்தாலும் செல்ஃபி, அழுதாலும் செல்ஃபி என செல் முழுக்க நம் செல்ஃபிக்களால் நிரம்பி வழிகிறது.

ஆனால், பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் வெளி யிட்டிருக்கும் செல்ஃபி பற்றிய ஆய்வு முடிவுகள் நம்முடைய செல்ஃபி பழக்கத்தைப் பரிசீலிக்கச் சொல்கிறது. 

சமூக வலை தளங்களில் அதிகமாக செல்ஃபி பகிர்பவர் களுக்கு நெருங்கிய உறவுகளிடம் பிரச்சினை வருவதாக அந்த ஆய்வு சொல்கிறது. 

பேஸ்புக்கில் அதிகமான லைக்குகளை அள்ளும் செல்ஃபிக்களால் நிஜ வாழ்க்கை உறவுகள் பாதிக்கப் படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக் கின்றன.

“தொடர்ந்து செல்ஃபி பகிர்பவர்களைச் சுற்றி இருப்பவர் களால் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை” என்கிறார்

பர்மிங்கம் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி யாளர் டேவிட் ஹாஃப்டன். 

எந்தளவுக்கு அதிகமாக செல்ஃபிக்கள் பகிரப்படுகின் றனவோ, அந்தளவுக்குச் சுற்றி இருப்பவர்களின்

ஆதரவை அது குறைப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் கூறியிருக் கின்றனர்.

“நாம் நம் நண்பர்களுக் காக ஃபேஸ்புக்கில் பகிரும் படங்கள் பல தரப்பினரைச் சென்றடை கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 


அதனால் உங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கும் பல்வேறு குரூப்பில் இருப்பவர் களுடன்

அந்தப் படங்கள் பகிரப்படு கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது” என்கிறார் ஹாஃப்டன்.

அதே மாதிரி, குடும்பத்தி னருடன் இருக்கும் செல்ஃபிக்களை விட நண்பர்களுடன் இருக்கும்

செல்ஃபிக்கள் அதிகமாகப் பகிரப்படும் போது, அது தம்பதிகளின் உறவை அதிகளவில் பாதிக்கிறது. 

“இளம் பெண்களின் செல்ஃபிக்களுக்கு ஃபேஸ்புக்கில் கிடைக்கும் வரவேற்பு, ஆண்களு க்கும், மற்ற வயதினருக்கும் கிடைப்ப தில்லை” என்று அந்த ஆய்வு முடிவு சொல்கிறது.
Tags:
Privacy and cookie settings