மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யவது எப்படி?

சென்னை மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய விரும்பும் மூத்த குடிமக்கள், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்பட அடையாள அட்டை ஆகியவைகளை 
சமர்பித்து கட்டணமில்லா டோக்கன்களை பெறுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 
எதிர்வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கு தலா 10 கட்டணமில்லா டோக்கன்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், புதிதாக இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் மூத்த குடிமக்கள், அதற்கான படிவத்தை அருகாமையிலுள்ள மாநகர் போக்குவரத்து கிளை அலுவலகங்களில் சமர்பித்து கட்டணமில்லா டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings