அமைச்சர் நிலோபர் கஃபிலுக்கு கூடுதலாக வக்ஃபு வாரியம் ஒதுக்கீடு !

0 minute read
தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர் கஃபிலுக்கு வக்ஃபு வாரியம் துறை கூடுதலாக ஒதுக்கப் பட்டுள்ளது. ஜெயலலிதா அமைச்ச ரவையில் வாணியம்பாடி தொகுதியில் 
வெற்றி பெற்ற நிலோபர் கஃபிலுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வழங்கப் பட்டுள்ளது.

அமைச்சரவை யில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் இவர் மட்டுமாகும். இதனிடையே, ஜெயலலிதா சிறை சென்ற போது பஜாரில் நிலோபர் வன்முறை நடத்திய வீடியோ சமீபத்தில் வெளியாகியது. 

இருப்பினும், வக்ஃபு வாரிய துறையையும் நிலோபருக்கு கூடுதலாக தந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இந்த அறிவிப்பு இன்று வெளியானது. 

கடந்த அமைச்சரவை யில் வக்ஃபு வாரிய துறையை அமைச்சர் வளர்மதி நிர்வகித்து வந்தார். நடந்து முடிந்த தேர்தலில் வளர்மதி தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings