பிரணவை ஓரம் கட்டி சச்சின் மகனுக்கு இடம்.. சர்ச்சை !

1009 ரன்களை அடித்து நொறுக்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற பிரணவ் தனவாடே.. யாரால் மறக்க முடியும் இவரை. ஆனால் இவருக்கு மேற்கு மண்டலத்தின் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடமில்லை. 
ஆனால் எந்த சாதனையும் புரியாத அர்ஜூன் டெண்டுல்கருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் படு சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அர்ஜூன் டெண்டுல்கர், சச்சின் டெண்டுல்கரின் மகன் ஆவார். 

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஏன், லட்சக்கணக்கான சிறார்களும், இளைஞர்களும் கிரிக்கெட்டர் ஆகி விட வேண்டும் என்ற கனவுடன் தெருத் தெருவாக விளையாடி வருகின்றனர். மைதானம் மைதானமாக வியர்வையைச் சிந்திக் கொண்டுள்ளனர்.

ஆனால் கடைசியில் வாய்ப்பு கிடைப்பது என்னவோ சிலருக்கு மட்டுமே. இந்த நிலையில் மேற்கு மண்டலத்திற்கான 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் பிரணவ் தனவாடேவுக்கு இடம் கிடைக்கவில்லை. 

ஆனால் அர்ஜூன் டெண்டுல்கருக்கு இடம் கிடைத்துள்ளது. பிரணவ் சில மாதங்களுக்கு முன்பு உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் ஆட்டத்தைக் கொடுத்த சாதனையாளர். 

மும்பை கல்யாண் பகுதியைச் சேர்ந்த இவர் ஆட்டோ டிரைவரின் மகன். இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதே இவரது லட்சியம். இந்த ஆண்டு தொடக்கத்தில் மும்பையில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக ஆடி ரன் மழை பொழிந்தார் இந்த இளம் வீரர்.

மாரத்தான் ஓட்டம் போல தொடர்ந்து ஆடி வந்த அவர் 1009 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து உலக சாதனை படைத்தார். கிரிக்கெட்டின் எந்த வகை ஆட்டத்திலும் யாரும் இந்த அளவுக்கு ரன் குவிக்கவில்லை என்பதால் பிரணவ் ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றார். 

ஆனால் அவருக்கு 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியியல் இடம் கிடைக்கவில்லை. மாறாக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. 

இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜூன் டெண்டுல்கர் இதுவரை எந்த ஒரு முத்திரையையும் கிரிக்கெட்டில் பதித்ததில்லை. சச்சின் மகன் என்ற ஒரே ஒரு பெருமை மட்டுமே அவரிடம் உள்ளது. 

அதைத் தாண்டி இன்னும் தனது அடையாளத்தை அவர் பதிக்கவே இல்லை. ஆனால் அவருக்கு அணியில் இடம் கிடைத்து, பிரணவ் ஓரம் கட்டப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
Tags:
Privacy and cookie settings