சீன அதிகாரிகள் முரட்டுத் தனமானவர்கள் என இங்கிலாந்து மகாராணி பேசிய பேச்சுக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளன.
லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் நேற்று மாலை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
சீனாவுக்கான இங்கிலாந்து தூதரிடம் இந்நிகழ்ச்சியில் பேசிய மகாராணி எலிசபெத், கடந்த ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் இங்கிலாந்துக்கு வந்தது குறித்தும் கருத்துக்களைத் தெரிவித்தார்.
சீன அதிபரின் வருகையின் போது அவருடன் வந்த அதிகாரிகள் மிகவும் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதாக அவர் தெரிவித்த கருத்துக்கள் குறித்த காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளன.
இதற்கிடையே, அதே நாளில், நைஜீரியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் நாடுகள் ஊழல் மிகுந்தவை என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கருத்து தெரிவித்தது தொடர்பான காட்சிகளும் வெளியாகி யுள்ளன.
கடந்த 64 ஆண்டுகளில் மகாராணி எலிசபெத் இது போன்ற நாகரிகமற்ற கருத்துக் களைத் தெரிவித் துள்ளது இதுவே முதல் முறை எனக்கருதப் படுகிறது.