ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகலயா.. பறக்கலாம் ஏர் இந்தியாவில் !

ராஜ்தானி ரயில்களில் வெய்ட்டிங் லிஸ்ட கிளியர் ஆகவில்லை எனில் கவலை வேண்டாம். உங்களை அன்போடு அழைத்து செல்ல தயாராக உள்ளது ஏர் இந்தியா விமானம். 
ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ரயில்வே நடுவே ஏற்கனவே இதுதொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக கூறியுள்ளார்

ஏர் இந்தியா தலைவர் அஸ்வனி லோகானி. இந்த திட்டம், ஐஆர்சிடிசி வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 

ராஜ்தானி ரயிலில் முதல் வகுப்பு ஏசி டிக்கெட் புக் செய்தவர்கள், டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை என்றால், தானாகவே ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க தகுதியுடையவர்களாகிவிடுவார்கள். 

அதேநேரம், 2வது மற்றும் 3வது அடுக்கு ஏசி பெட்டிகளுக்கு முன்பதிவு செய்திருந்தால், கூடுதலாக ரூ.2 ஆயிரம் செலுத்தினால் ஏர் இந்தியாவில் பறந்து செல்ல முடியுமாம்.
Tags:
Privacy and cookie settings