வாட்ஸ்அப் ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

ஸ்மார்ட்போனில் உள்ள WhatsApp அப்ளிகேஷனை பல மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எழுத்து மற்றும் குரல் வழி தகவல்களை பொதுவாக அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இவற்றில் உள்ள சில Option-ஐ தெரிந்து வைத்திருக்க மாட்டர்கள்.
பொதுவாக கணனியில் தான் Bold, italics மற்றும் strikethrough போன்ற வசதிகள் இருக்கும். ஆனால் WhatsApp-லும் நாம் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

*, ~, _ போன்ற குறியீடுகளுக்கு இடையில் வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் அத்தகையை வசதிகளை WhatsApp நாம் பெற முடியும்.

அதேபோல் WhatsApp-ல் யாராலும் எளிதில் தப்பிக்க முடியாத ஒரு விடயம் blue ticks. அதை வைத்து அனுப்பிய தகவல் படிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை கண்டறியலாம்.

இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க Privacy பகுதியில் இருக்கும் ‘Read Receipts’ என்னும் வசதியை ஓப் செய்து வைக்கலாம். இதனால் blue ticks பிரச்சனையில் இருந்து எளிதில் தப்பலாம். அதேபோல் ‘Airplane mode’ பயன்படுத்தியும் அனுப்பப்பட்ட தகவல்களை அனுப்பியவருக்கு தெரியாமல் படிக்கலாம்.

WhatsApp-ஐ நீங்கள் கணனியில் இருந்தே பயன்படுத்தலாம். இதற்கு WhatsApp Web உதவுகிறது. உங்களது WhatsApp மூலம் QR codeஐ ஸ்கேன் செய்வதன் மூலம் நாம் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

மற்றவர்களுடைய ‘last seen’ பார்க்க வேண்டும், ஆனால் நம்முடையதை மற்றவர்கள் பார்க்க கூடாது என்றால் குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவரது நம்பரை அழித்துவிடுங்கள்.

தற்போது Privacy சென்று ‘last seen’ பகுதியில் everyoneஐ ‘my contacts’ ஆக மாற்றுவதன் மூலம் சாத்தியம் ஆக்கலாம்.
Tags:
Privacy and cookie settings