கணவனை பழிவாங்க கண்ணில் ஃபெவிகுவிக்கை ஊற்றிய மனைவி !

மத்திய பிரதேசத்தில் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவன் தூங்கும்போது அவரது கண்ணில் ஃபெவிகுவிக்கை ஊற்றியுள்ளார் மனைவி. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ். அவரது மனைவி விஜயலட்சுமி. 
சந்தோஷுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. மதுவுக்கு அடிமையான அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். குடிபோதையில் வரும் அவர் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். 

குடிப்பழக்கத்தை விட்டுவிடுமாறு விஜயலட்சுமி வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை. இதனாலேயே கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சொல்லி சொல்லி பார்த்த விஜயலட்சுமி தனது கணவருக்கு ஒரு பாடம் புகட்ட நினைத்தார். இதையடுத்து சந்தோஷ் தூங்கும்போது அவரது கண்ணில் ஃபெவிகுவிக் பசையை ஊற்றிவிட்டார். 

பெவிக்விக் ஊற்றப்பட்ட பிறகு சந்தோஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Privacy and cookie settings