கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன் ?

ரொம்ப நாளாய் தேங்காய் ஏன் கோவிலில் உடைக்கிறார்கள் கண்டிப்பாய் அதில் மிக பெரிய அர்த்தம் இருக்கும் என எல்லோர் மனதிலும் சந்தேகம் இருக்கும்


தேங்காய் தரும் தென்னை மரமும், வாழைப்பழம் தரும் வாழை மரமும் மக்களுக்கு தம்மிடம் உள்ள அனைத்தையும் தந்து உதவுகிறது.

இவற்றின் எந்த பாகமும் வீண் ஆவதில்லை. 

மனிதனும் அப்படி உலகுக்குப் பயன்பட வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் தான்

கோவிலில் அனைத்து பூஜைகளிலும் தேங்காய் உடைத்த பிறகே நிவேதனம் செய்வார்கள்.

தேங்காய் உடைப்பதே நம் ஆன்மாவை சுற்றியுள்ள மும்மலங்களை போக்குவதற் காக தான்.

ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் மும்மலம் என்று சொல்லப் படுகிறது.

தேங்காய் மேல் இருக்கும் மட்டை தான் மாயை மலம் எனப்படுகிறது.

மட்டை எனும் மாயை மலம் நீங்கினால் அடுத்து நார் எனும் கன்ம மலம் வரும்.

கன்ம மலம் நீக்கப் பட்டால் தேங்காயைச் சுற்றி இருக்கும் ஓடு தெரியும். இந்த ஓடு ஆணவ மலத்தை குறிக்கும்.

ஓட்டை உடைத்தால் தேங்காய் இரண்டாக உடைந்து உள்ளே இருக்கும் வெள்ளைப் பருப்பு தெரியும்.

இந்த வெள்ளைப் பருப்பை பேரின்பம் என்பார்கள். ஆக வாழ்வில் மாயை, கன்மம், ஆணவம் என்ற மும்மலங் களையும் விரட்டினால்

தான் பேரின்பத்தை பெற முடியும் என்பதை தேங்காய் உடைப்பதன் தாத்பர்யமாக சொல்கிறார்கள்.

தேங்காய் உடைப்பதில் இன்னொரு தாத்பர்யமும் உள்ளது. தேங்காய் உள்ளே இருக்கும் இளநீர் உலக ஆசைகளின் அடை யாளமாகும்.

தன்னை சுற்றி இருக்கும் ஓடு ஒரு போதும் உடையாது. அது என்றென்றும் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று இளநீர் நம்புகிறது.

அது போலதான் நாம் இளம் வயதில் நமது உடம்பு அழகானது, உறுதியானது என்று நம்பி பல்வேறு ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம்.


ஆனால் மனம் பக்குவம் பெறும் போது நமது உடம்பு சாசுவதமானது அல்ல என்பது புரியும். 

அதாவது இளநீர் வற்றும் போது, அது தேங்காயின் பக்குவத்துடன் இரண்டற கலந்து விடும். ஓட்டுக்குள் இருக்கும் நீர் வற்றுவதால், ஒரு போதும் தேங்காய் கெட்டுப் போவதில்லை.

மாறாக உறுதி பெறும். அது போல இளம் வயதில் ஆசைகளுடன் சுற்றித் திரியும் நாம் அனுபவ ஞானம் எனும் பக்குவம் வர, வர உலக ஆசைகளை துறந்து விடுகிறோம்.
Tags:
Privacy and cookie settings