சென்னைவாசிகளை வியப்பில் ஆழ்த்திய பதவியேற்பு விழா

ஜெயலலிதா 6வது முறையாக இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் அதிமுகவினர் அவருக்கு ஒரு பேனர், கட்அவுட் கூட வைக்காமல் இருந்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஜெயலலிதா இன்று 6வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார். 

ஜெயலலிதா சாதாரணமாக போயஸ் கார்டனில் இருந்து கிளம்பினாலே அவரை வரவேற்று வழிநெடுகிலும் பெரிய பெரிய பேனர்கள், கட்அவுட்டுகள் வைத்து அதிமுகவினர் அசத்தி விடுவார்கள்.

இந்நிலையில் இன்று பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வந்தும் அவர் வந்த வழியில் பெரிய பெரிய பேனர்கள், கட்அவுட்டுகள் இல்லாதது பலரையும் வியக்க வைத்துள்ளது. போயஸ் கார்டனில் இருந்து விழா நடந்த சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கு வரை அதிமுக கொடிகள் தான் பறந்தன.

ஜெயலலிதாவை வாழ்த்தி, வரவேற்று பேனர், கட்அவுட் எதுவும் வைக்கப்படவில்லை. தன்னை வாழ்த்தி யாரும் பேனர்களோ, கட்அவுட்களோ, பெரிய பெரிய தோரணங்களோ வைக்கக் கூடாது என்று ஜெயலலிதா கட்சியினருக்கு அன்பு வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.

அம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே பேனர்கள், கட்அவுட்டுகள் வைக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம், சாலைகளின் இரு மருங்கிலும் திரண்டு விட்ட ஆயிரக்கணக்கான அதிமுகவினரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் தாரை தப்பட்டை, செண்டை மேள முழக்கம், கலைக் குழுக்களின் நடனம் என வழக்கமான அதிமுகவின் தடபுடல்கள் நீக்கமற நிறைந்திருந்தது.
Tags:
Privacy and cookie settings