அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கருப்பையில் இருந்த சிசுவினை வெட்டி எடுத்த பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலராடோ மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
35 வயதான டைனல் லேன் என்ற பெண், 7 மாத கர்ப்பிணியாக இருந்த மிச்செல் வில்கின்ஸ் (26) என்பவரை தாக்கியுள்ளார்.
தாக்கியதோடு மட்டுமல்லாமல் கருவில் இருந்த சிசுவை வெளியே எடுத்துள்ளார். இதில் சிகிச்சை பலனின்றி அந்த சிசு இறந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக வில்கின்ஸ் பிழைத்து கொண்டுள்ளார்.
லேன் தனது காதலரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் சம்பவத்தன்று, வில்கின்ஸை தாக்கி அவரது கருவில் இருந்த சிசுவை வெளியே எடுத்துள்ளார்.
அப்போது அவரது காதலர் வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் அங்கிருந்த ரத்தக்கறை தன்னுடையது என்றும் தனது கரு கலைந்துவிட்டது எனவும் லேன் பொய் சொல்லியுள்ளார்.
அந்நேரத்தில் வில்கின்ஸ் வீட்டின் அடித்தளத்தில் சென்று கொண்டு கதவை மூடி ஒளிந்து கொண்டுள்ளார். மேலும் 911-க்கு போன் செய்த அவர், நடந்தவற்றை கூறியதோடு,
தனது ரத்தப் போக்கை நிறுத்த முயன்றுள்ளார்.அதற்குள் லேனின் காதலன், லேனையும் அந்த சிசுவையும் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இந்த வழக்கில், கடந்த பிப்ரவரியில் லேன் மீது கொலை குற்றம் உறுதியாகி வழக்கு நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், வெள்ளிக் கிழமையான இன்று, அவர் மீது சட்ட விரோதமாக கர்ப்பத்தை கலைத்தது உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வில்கின்ஸ், லேனிடம் நீதிமன்றத்தில் கூறுகையில், நீ என் சிசுவை கொன்று என்னை வேண்டுமென்றே பல முறை இறக்க வைக்கிறாய்.
மேலும், நீ நமது சமூகத்தில் வாழும் தகுதியை இழந்து விட்டாய். எனவே நீ அதிகப்பட்ச தண்டனை பெற வேண்டும் என விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், தன் சிசுவை கொன்ற லேனை தான் மன்னிப்பதாகவும், அவரிடம் இருந்து
எந்த விளக்கத்தையும் தான் ஏற்க போவதில்லை என வில்கின்ஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.