அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தற்காலிகமாக வெள்ளை மாளிகை மூடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரின் உத்தியோகபூர்வ முதன்மை அலுவலகத்தின் 17-வது பென்சில்வேனியா அவென்யூ அருகே, உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 3 அளவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த துப்பாகி சூடு நடத்தியது யார் என்பதும், சம்பவத்திற்கான காரணம் என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருவதாக வாஷிங்டன் போலீஸ் தெரிவித்துள்ளார்.
துப்பாகி சூடு நடைப்பெற்ற போது அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் இல்லை துணை அதிபர் ஜோ பிடேன் மாளிகையில் இருந்துள்ளார். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மிக உயர்ந்த பாதுகாப்பு மிகுந்த வெள்ளை மாளிகை அருகே இந்த சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.