தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சார இலவசம் என்ற அறிவிப்பை யடுத்து, மின்கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் வெளியிட் டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வீட்டு மின்நுகர் வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதனை யடுத்து மே 23-ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராக மீண்டும் பதவியேற்றதும், 100 யூனிட் இலவச மின்சாரத்து க்கான ஆணையில் கையெழு த்திட்டார்.
அதன்படி மே 23-ஆம் தேதிக்குப் பின்பு எடுக்கப்படும் அனைத்து கணக்கீடு களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும். இந்நிலையில் மின்சார பயன்பாட் டுக்கான கட்டணத்தை எவ்வாறு கணக்கிடுவது என்று பல்வேறு குழப்பங்கள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து மின்சாரத்தை கணக்கிடுவது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் வெளி யிட்டுள்ளது.
கணக்கீட்டு முறை: மின்சார வாரியம் 0 - 200, 201 - 500, 501 - 1100 வரை என்று மூன்று பிரிவுகளில் இரு மாதங் களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலி க்கிறது.
புதிய சலுகை யின்படி இரண்டு மாதங்களில் 100 யூனிட் மின்சாரம் வரை பயன் படுத்தினால் மின் கட்டணம் செலுத்த வேண்டிய தில்லை.
0 - 200 யூனிட்: ஒரு மின் நுகர்வோர் 120 யூனிட் பயன் படுத்தினால், அவருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம். மீதம் உள்ள 20 யூனிட்டுக்கு ரூ 1.50 வீதம் ரூ. 30, நிரந்தரக் கட்டணம் ரூ. 20 சேர்த்து ரூ. 50 செலுத்த வேண்டும்.
இதே போன்று 200 யூனிட் வரை பயன்படுத்து வோருக்கு 100 யூனிட்டை கழித்தது போக மீதி உள்ள யூனிட்டுக்கு ரூ. 1.50 கட்டணத்தில், நிரந்தரக் கட்டணம் ரூ 20 சேர்த்து வசூலிக்கப்படும்.
201 - 500 யூனிட்: ஒரு மின்நுகர்வோர் 500 யூனிட் வரை பயன் படுத்தினால் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்.
அடுத்த 101 - 200 யூனிட்டுக்கு ஒரு யூனிட் ரூ. 2 என்ற அடிப்படை யில் ரூ. 200, 201 - 500 யூனிட் வரை, ஒரு யூனிட் ரூ.3 என்ற அடிப்படை யில் ரூ. 900, அதனுடன் நிரந்தக் கட்டணம் ரூ. 30 சேர்த்து, மொத்தம் ரூ. 1130 வசூலிக்கப்படும்.
501 - 1,100 யூனிட்: ஒரு மின்நுகர்வோர் 1,100 யூனிட் வரை பயன் படுத்தினால் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்.
101 - 200 யூனிட் வரை, ஒரு யூனிட் ரூ. 3.50 என்ற அடிப்படையில் ரூ. 350, 201 - 500 யூனிட் வரை, ஒரு யூனிட் ரூ.4.60 என்ற அடிப்படையில் ரூ. 1,380, 501 - 1,100 வரை ஒரு யூனிட் ரூ. 6.60 என்ற அடிப்படை யில் ரூ. 3,960, நிரந்தரக் கட்டணம் சேர்த்து ரூ. 50 சேர்த்து, மொத்தம் ரூ. 5,740 வசூலிக்கப்படும்.
100 யூனிட் மின்சார சலுகை அனைத்து வீட்டு உபயோக மின் நுகர்வோர் களுக்கும் கிடைக்கும். வாடகை வீடுகளில் வசிப்பவர் களுக்கு சப்-மீட்டர் வைத்தி ருந்தால் அவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கணக்கிடப் பட்ட மின் கட்டண விவரம் : யூனிட் -மின்கட்டணம்
யூனிட் | 120 | 160 | 200 | 250 | 300 | 450 | 500 | 650 | 800 | 950 | 1,100 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மின்கட்டணம் ரூபாயில் | 50 | 110 | 170 | 380 | 530 | 980 | 1,130 | 2,770 | 3760 | 4,750 | 5,740 |