பிளஸ் 2 வில் தோல்வி.. துணைத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள் !

பிளஸ் 2 தேர்வில் தோல்வி யடைந்த, வருகை தராத மாணவர்கள் சிறப்பு துணைத் தேர்வை எழுத வெள்ளிக் கிழமை (மே 27) வரை விண்ணப் பிக்கலாம்.
பிளஸ் 2 தேர்வில் தோல்வி யடைந்த, வருகை தராத மாணவர்களுக்காக வரும் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடை பெறுகிறது.

இந்தத் தேர்வை எழுத விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர் வர்கள் தேர்வு மையங்கள் மூலமும் ஆன்-லைனில் விண்ண ப்பிக்க வேண்டும்.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங் களுக்கு நேரில் சென்று வெள்ளிக் கிழமை (மே 27) வரை ஆன்- லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணைய நிறுவனங் களின் மூலம் விண்ணப்பிக்க முடியாது.

தேர்வுக் கட்டணம்: தனித் தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50, கூடுதல் கட்டணம் ரூ.35, ஆன்- லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.135 ரொக்கமாகச் செலுத்த வேண்டும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு: தேர்வர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வு மையம், பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப் படும்.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோ ருக்கும், வருகை புரியாதோ ருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடை பெறவுள்ளது. 

இந்தத் தேர்வுக்கு விண்ணப் பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியி டப்படும்.
Tags:
Privacy and cookie settings