உலகின் மிகப்பெரிய கப்பல் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் !

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வர்ணிக்கப்படும் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் நேற்று ராயல் கரீபியன் நிறுவனத்திடம் டெலிவிரி கொடுக்கப் பட்டது.
உலகின் மிகப்பெரிய கப்பல் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் !
பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் நஸையரிலுள்ள எஸ்டிஎக்ஸ் ஷிப் யார்டில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் ராயல் கரீபியன் நிறுவனத்தின் அதிபர் மைக்கேல் பெலே, தலைவர் ரிச்சர்டு பெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த கப்பலில் பணியாற்ற இருக்கும் 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களும், பத்திரிக்கையாளர்களும் டெலிவிரி பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்தநிலை யில், இந்த கப்பலின் இன்டீரியர் படங்களை காணும் பாக்கியம் கிட்டியிருக்கிறது.பிரான்ஸ் நாட்டிலுள்ள எஸ்டிஎக்ஸ் ஷிப் யார்டில் 2013ம் ஆண்டு செப்டம்பரில் இந்த கப்பல் கட்டும் பணிகள் துவங்கின.

கிட்டத்தட்ட 2,500 பணியாளர்கள் இரவு பகலாக இந்த கப்பலை கட்டும் பணியில் ஈடுபட்டனர். 
உலகின் மிகப்பெரிய கப்பல் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் !
10 மில்லியன் மணி நேர மனித ஆற்றலில் இந்த கப்பல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் 40 மாதங்களில் கட்டப்பட்டு இருக்கிறது.

பல்வேறு பிரம்மாண்டங்களை கொண்ட இந்த மிதக்கும் நகரத்தில் 6,360 விருந்தின ர்களும், 2,100 பணியாளர்கள் என மொத்தமாக ஒரே நேரத்தில் 8,500 பேர் வரை பயணிக்க முடியும்.

இந்த கப்பல் 217 அடி அகலம் கொண்டது. இதுவரை கட்டப்பட்ட சொகுசு கப்பல் களிலேயே அதிக அகலம் கொண்ட கப்பல் இது தான். 
உலகின் மிகப்பெரிய கப்பல் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் !
மேலும், 362 மீட்டர் நீளம், அதாவது ஈபிள் கோபுரத்துடன் ஒப்பிடும் போது 50 மீட்டர் கூடுதல் நீளம் கொண்டது. 16 அடுக்குகளை கொண்ட பிரம்மாண்ட மிதக்கும் நகரமாக இருக்கிறது.

இந்த சொகுசு கப்பலில் ஒரேநேரத்தில் 1,400 பேர் அமரும் வசதி கொண்ட திரையரங்கம், 16வது மாடியி லிருந்து 6 வது மாடியுடன்

இணைக்கப் பட்டிருக்கும் 100 அடி உயர பிரம்மாண்ட நீர் சறுக்கு, நீர் சாகச விளையாட்டு அமைப்புகளை கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய கப்பல் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் !
ரோபோட் மூலமாக மதுவகைகளை பரிமாறும் பயோனிக் பார் என தனது சகோதர சொகுசு கப்பல்களை விஞ்சிய வசதிகளை கொண்டிருக்கிறது.

இந்த கப்பலின் நடுவில் அமைக்கப் பட்டிருக்கும் பூங்காவில் 12,000 வகை தாவர வகைகள் உள்ளன.

இது இந்த கப்பலில் பயணிப்போரின் மனதை கவரும் அம்சமாக இருக்கும். இது தவிர, அதிசய உலகம் என்ற பூங்காவும் பயணிகளை குதூகலிக்கச் செய்யும்.
உலகின் மிகப்பெரிய கப்பல் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் !
கப்பலிலேயே ஷாப்பிங் செய்வதற்கான கடைகள் அடங்கிய ஷாப்பிங் தெருவும் உள்ளது.இந்த கப்பலில் சூதாட்ட விடுதியும் உள்ளது.

இசை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்து வதற்காக இந்த கப்பலில் மிகப்பெரிய கூட்ட அரங்கமும் உள்ளது.

மேலும் இதில் கடலின் அழகை ரசித்துக் கொண்டே பயணிப்பதற் கான மிக சொகுசான சூட் அறைகள் உள்ளன.
உலகின் மிகப்பெரிய கப்பல் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் !
இந்த கப்பலில் உள்ள 23 நீச்சல் குளங்களில் 4.7 மில்லியன் பவுண்ட் அளவு நீரை நிரப்பும் வசதி, வெந்நீர், நீர் விளையாட்டு பூங்கா போன்றவை பயணிகளுக்கு பரவசத்தை அளிக்கும் என ராயல் கரீபியன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் மிதக்கும் சொர்க்க லோகமாக பயணிகளை பரவசப் படுத்த தயாராகி இருக்கிறது ஹார்மோனி ஆஃப் தி சீஸ்.
உலகின் மிகப்பெரிய கப்பல் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் !
கடந்த 2009ம் ஆண்டு இதன் வகையிலான ஆலூர் ஆஃப் தி சீஸ் மற்றும் 2010 -ம் ஆண்டு ஓஸிஸ் ஆஃப் தி சீஸ் ஆகிய சொகுசு கப்பல்களை தொடர்ந்து 7 ஆண்டு இடைவெளிக்கு 

பின்னர் மற்றொரு உலகின் பிரம்மாண்ட சொகுசு கப்பலை சேவைக்கு களமிறக்க உள்ளது அமெரிக்காவை சேர்ந்த ராயல் கரீபியன் நிறுவனம்.

1.8 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்த கப்பல் கட்டப்பட்டு இருக்கிறது. இதுவரை கட்டப்பட்ட உலகின் மிகவும் காஸ்ட்லியான கப்பல்களில் ஒன்றாக தெரிவிக்கப் படுகிறது.
உலகின் மிகப்பெரிய கப்பல் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் !
பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் நஸையரில் உள்ள ஷிப் யார்டிலிருந்து வரும் ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்தில் உள்ள சவுதம்ப்டன் துறை முகத்திற்கு செல்கிறது. 

அங்கிருந்து மே 22ந் தேதி புறப்பட்டு பார்சிலோனா செல்கிறது. வரும் அக்டோபர் மாத இறுதியி லிருந்து சுற்றுலா பயணங்களை முறைப்படி துவங்க இருக்கிறது.
Tags:
Privacy and cookie settings