நாம் உண்டவுடன் உணவில் உள்ள அந்த சுகரை ப்ராசஸ் செய்ய உடலுக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் பிடிக்கிறது. அதன்பின் நாம் எதையும் உண்ண வில்லை உண்ணா விரதம் எப்படி நமக்கு உதவுகிறது:-
எனில் உடலில் சுகர் இல்லை. இன்சுலின் உற்பத்தி செய்யும் அவசியம் இல்லை. உடலில் இன்சுலின் இருக்கும் வரை உடல் கொழுப்பை எரிக்கும் மோடுக்கு போகாது
இன்சுலின் சுரக்காமல் நின்றவுடன் உடல் சேமிப்பில் உள்ள (அதாவது தொப்பையில் உள்ள) கொழுப்பை எரித்து க்ளுகோனோ ஜென்சிஸ் புராசஸ் மூலம் சுகராக மாற்றுகிறது.
உணவு இல்லா விடினும் உடலுக்கு தேவையான எனெர்ஜி இப்படி கிடைக்கிறது. ஆக ஆறு அல்லது எட்டு மணி நேரத்துக்கு மேல் நீங்கள் உண்ணா விரதம் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தொடர்ந்து
உங்கள் உடல் கொழுப்பை எரித்து கொண்டே இருக்கிறது. எதாவது உணவு பொருள் உங்கள் வாயில் போனால் இந்த புராசஸ் நின்று மறுபடி ஆறு- எட்டு மணி நேரம் கழித்து தொடர்கிறது
ஆக தினம் ஆறு சிறு உணவுகள் அல்லது நாள் முழுக்க இடைவிடாது தின்று கொண்டே இருப்பது ஆகியவை உங்களை எடையை இழக்கவிடாமல் தடுக்கிறது.
பலரும் இரவு ஹெவியாக உண்டு விட்டு நடுவே எழுந்து கூட ஒரு ஸ்னாக் சாப்பிட்டு விட்டு காலையில் எழுந்ததும் பாயசத்துடன் (காப்பி) நாளை துவக்குவார்கள்.
ஆக அவர்கள் உடல் கொழுப்பை எரிக்கும் மோடுக்கு செல்வதே கிடையாது ஆய்வு ஒன்றில் ஒரே அளவு காலரிகள் இரு குழு எலிகளுக்கு கொடுக்கபட்டது. ஒரு குழு எலிகளுக்கு நாள் முழுக்க உணவு அளிக்க பட்டது.
ஆனால் தினம் 16 மணிநேரம் விரதம் இருந்த எலிகள் மீதமிருந்த எட்டு மணி நேரத்தில் உண்ணா விரதம் இருக்காத எலிகள் உண்ட அதே அளவு காலரிகளை உண்ட போதிலும்
அவற்றை விட அதிக எடையை இழந்தன. ஆரோக்கி யமாகவும்,. சுறுசுறுப் பாகவும் இருந்தன
காலை உணவு ஒரு நாளின் முக்கிய உணவு என்ற வதந்தியை பரப்பியவை முழுக்க ஸ்பான்சரில் நடந்த ஆய்வுகள் உண்னாவிரதம் (முழு, பகுதி) நம் எடையை குறைப்பது மட்டும் அல்ல, விரதம் இருக்கும் சமயம் மூளையின் செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
பசியோடி ருக்கும் சமயம் தான் இரையை எப்படி தேடுவது என்பதை மனிதன் யோசிப்பது அவசியம். அதனால் இம்மாதிரி சமயங்களில் தான் மனிதனின் மூளையில் புதிய செல்கள் தோன்றுகின்றன.
உண்ணா விரதம் நம் உடலின் இன்சுலின் சென்சிட்டிவிட்டையையும் அதிகரிக்கிறது. அதாவது குறைவான இன்சுலினை சுரந்தே அதிக அளவு சுகரை எரிக்கும் சக்தி என வைத்து கொள்வோம்
உண்ணா விரதம் நம் உடலின் இன்சுலின் சென்சிட்டிவிட்டையையும் அதிகரிக்கிறது. அதாவது குறைவான இன்சுலினை சுரந்தே அதிக அளவு சுகரை எரிக்கும் சக்தி என வைத்து கொள்வோம்
மன அழுத்தத்தை தாங்கும் வலிமை, வயதாவதை தடுப்பது ஆகிய வற்ரையும் உண்னா விரதம் அளிக்கிறது அதுபோக ஒல்லியாக இருந்து அன்ஃபிட் ஆக இருப்பதை விட குண்டாக இருந்து
ஃபிட் ஆக இருப்பவர்கள் ஆரோக்கிய மானவர்கள் என தெரிகிறது. சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் இவ்வகை ஒல்லிதன்மை மிக ஆபத்தானது.
காரணம் இவர்கள் உடலில் கொழுப்பு உள்ளுறுப்பு களில் (இதயம், கிட்னி) படியும். அதே சமயம் சிலர் குண்டாக இருந்தாலும் அவர்கள் உடலில் உள்ல கொழுப்பு முழுக்க தொப்பை, தொடை முதலிய இடங்களில் இருக்கும் (சுமோ வீரர்களை நினைவில் கொள்க).
இதனால் ஒபிசிட்டி வருமே ஒழிய உள்ளுறுப்புகள் பாதிக்க படுதல் முதலான ஆபத்துக்கள் இருப்பதில்லை. ஆக டயட் இருந்து தொப்பையை இறக்கினா லும், உடன் உடல்பயிர்சியும் செய்வது அவசியம்.
உடல்பயிற்சி உங்கள் இதயத்துக்கு, டயட் உங்கள் தொப்பைக்கு என வைத்து கொள்ளுங்கள். என்ன தான் பேலியோ, வாரியர் என டயட் இருந்தாலும் அதனுடன் எளிய நடைபயிற்சி போன்ற வற்றை சேர்ப்பது மிக, மிக அவசியம்.
டயட் என்பது 80% உணவு, 20% உடல்பயிற்சி. பிசிகல் பிட்னஸ், உடல்பயிர்சி இல்லாவிடில் என்ன தான் சிறப்பான டயட் ஆக இருந்தாலும் அது நம்மை காப்பாற்றாது.
தினம் 30- 45 நிமிட நடைபயிற்சி மினிமம் வாரம் 3- 4 நாள் செய்ய வேண்டும் (அல்லது அதுக்கு சமமான வீட்டு வேலை) தினம் குறைந்தது 12- 16 மணி நேரம் உண்ணா விரதம் இருக்க வேண்டும்.
உங்கள் உணவு இயற்கையை ஒட்டிய நம் ஜீன்களுக்கு நெருக்கமான பேலியோ உணவாக இருக்க வேண்டும்
இவையே நம் ஜீன்களுக்கு நெருக்கமான ஆதி மனிதனின் வாழ்க்கை முறையை ஒட்டிய முறை. இதுவே மருந்துகள், நோய்களில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கும்...
இவையே நம் ஜீன்களுக்கு நெருக்கமான ஆதி மனிதனின் வாழ்க்கை முறையை ஒட்டிய முறை. இதுவே மருந்துகள், நோய்களில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கும்...