தலைப்பைப் பார்த்தவுடன் என்னங்க சின்னப் புள்ளத்தனமா இருக்கு? ஒரு மனுஷனுக்குக் கை கழுவக் கூடவா தெரியாது? என்று வடிவேல் வாய்ஸில் கொந் தளித்தால், நீங்களும் நம்ம கட்சி தான்.
ஆனால், மேட்டர் அத்தனை சாதாரணமான தில்லை! ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு சத்தான உணவுகள் எத்தனை அவசியமோ, அந்த அளவுக்கு அவர் சுகாதாரமாக இருப்பதும் அவசியம்.
வயிற்றுப் போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் ஆகிய வற்றுடன் 80 சதவிகித தொற்று நோய்கள் ஏற்படுவதற்கும் கைகளின் சுத்த மின்மையே காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
உடல் உறுப்புகளில் அதிகம் கிருமிகள் இருக்க வாய்ப்புள்ள இடமும் கைகள் தான்.
ஸ்டெபி லோகாக்கஸ் ஆரியஸ் என்ற கிருமிகள் தான் இப்படி கைகளில் தங்கி பல நோய்களை ஏற்படுத்து கிறதாம்.
மேலை நாடுகளில் கரண்டிகள் மூலம் உணவு உட்கொள் வதால், கைகளின் மூலம் பரவும் நோய்கள் அங்கு குறைவு.
தனிமனித சுகாதாரம் மிகவும் அதல பாதாளத்தில் இருக்கும் நம் நாட்டிலோ, கைகளின் மூலமே உணவு உண்கிறோம்.
உணவு தயாரிப்பிலும் நேரடியாகக் கைகளைப் பயன் படுத்துகிறோம். குறிப்பாக நகத்தை முறையாக வெட்டி, நகக்கண்களை சுத்தமாகப் பராமரிப் பவர்களும் குறைவு தான்.
அதனால் கைகளின் சுத்தம் பற்றி மக்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்து வதற்காக, அக்டோபர் 15ம் தேதியை ‘சர்வதேச கை கழுவும் தின’மாகக் கொண்டாடி வருகிறது உலக சுகாதார நிறுவனம்.
எப்போ தெல்லாம் கைகளை சுத்தமாகக் கழுவுவது மிகவும் அவசியம்?
*கழிவறை சென்று வந்த பிறகு...
*குழந்தை களை சுத்தம் செய்த பிறகு...
*உணவு உண்ணும் முன் அல்லது குழந்தைக்கு உணவு ஊட்டும் முன்...
*உணவு சமைக்கும் முன்...
*செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகு...
*குழந்தைகள் கைகளை அடிக்கடி வாயில் வைத்துக் கொள்வார்கள். அதனால் விளையாடிய பிறகு...
*குழந்தைக்கு உடை மாற்றிய பின்...
*நோயாளி களுக்கு உணவுப் பொருட்கள் வாங்கிச் செல்லும் முன்...
மருத்துவ மனையில் நோயாளியைப் பார்த்து விட்டுத் திரும்பிய பிறகு... சாப்பிடப் போகும் முன் தண்ணீரில் கையை நனைத்து விட்டுச் செல்வதற்கு ‘கை கழுவுவது’ என்று பெயர் இல்லை.
கைகளை கழுவுவதற்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்து ரைக்கும் முறை இது தான்...
கைகளை கழுவுவதற்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்து ரைக்கும் முறை இது தான்...
கால அளவு: 40 முதல் 60 வினாடிகள் 2-வது கட்டத் திலிருந்து 7வது கட்டம் வரை முக்கிய மான கட்டம். 15 முதல் 20 வினாடிகள் இதற்காக எடுத்துக் கொள்ளுங்கள்.