உலகின் மிகக் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போனை நமோடெல் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் போனுக்கான முன்பதிவு இம்மாதம் 17ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
நமோடெல் அச்சே தின் நிறுவனத்தின் நிறுவனர் மாதவ ரெட்டி ரூ.99 விலையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப் படுத்தியுள்ளார்.
ஆதார் அடையாள அட்டை வைத்திருப் பவர்களுக்கு மட்டும் இது வழங்கப்படும் என ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்மார்ட்போன் 4 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம், லாலிபாப் மற்றும்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் ஒரு ஜிபி ராம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
பணம் கொடுத்து பொருளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் (சிஓடி) இந்த ஸ்மார்ட்போனுக்கு முன்பதிவு செய்யலாம்.
போனை டெலிவரி செய்வதற்கான கட்டணம் இதில் அடங்காது. வழக்கமான டெலிவரி தொகையை செலுத்த வேண்டும்.
'மேக் இன் இந்தியா' திட்டத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்தியர்களுக்காக இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
namotel.com இணையதளத்தில் ஸ்மார்ட் போன் புகைப்படம் வெளியிடப் பட்டுள்ளது. அது ஸ்மார்ட் போனைப் பற்றி விளக்குவதற்காக மட்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் இணைய தளத்தில் இந்த கருவியின் விலை ரூ.2,999 என்றும் விசேஷ சலுகையில்
இதன் விலை ரூ.99 என்றும் இதனினை பயனர்கள் கேஷ் ஆன் டெலிவரி எனப்படும் வீட்டில் கருவியை வாங்கியதும் பணம் அளிக்க முடியும்,
விநியோகம் செய்ய கட்டணங்கள் பொருந்தும் என குறிப்பிடப் பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த ஸ்மார்ட் அறிமுகப் படுத்தப்பட்ட சில மணி நேரங்களில் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஃப்ரீடம் 251 என்ற நிறுவனம் விலை குறைந்த ஸ்மார்ட் போன்களை வழங்குவதாக தெரிவித்திருந்தது.
நமோடெல் அச்சே தின் நிறுவனம் உலகின் குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.