ஹெல்மெட் அணிந்தாலும் ஆபத்து.. அணியாவிட்டாலும் ஆபத்து !

பைக் விபத்தில் வாகன ஓட்டிகள் உயிரிழப் பதை தடுக்க அரசு கட்டாய ஹெல்மெட் சட்டம் கொண்டு வந்தது. ஆனால், இன்னமும் பெரும் பாலானவர்கள் ஹெல்மெட் அணிவதை விரும்புவ தில்லை. 
ஹெல்மெட்


இந்நிலையில் சமீபத்தில் ஹெல்மெட் அணிவதன் சாதக பாதகங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப் பட்டது. அதில் ஹெல்மெட்டின் சாதகங்களை காட்டிலும் பாதக அம்சங்கள் அதிகம் உள்ளது தெரியவந்தது. 

மனித உடலின் மொத்த உயிர்நாடியாக விளங்குவது மூளை மட்டுமே. இது பாதித்தால் மனிதன் உயிருக்கு ஆபத்து என்பதன் காரணமாகவே ஹெல்மெட் பயன்படுத்தப் படுகிறது. 

ஆனால் ஹெல்மெட்டை அணியும் போது, அது தலையில் அழுத்துவதால், மூளையில் இருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கு செல்லும் நரம்புகள் பாதிப் படைகிறது.

இதில் உச்சந் தலையில் உயிர் இயக்க சக்தி நாளம் ஒரு நேர்கோடாக அமைந் துள்ளது. இதன் இருபுறமும் சிறுநீரகப்பை சக்திநாளங்கள் அமைந் துள்ளது.

மேலும் உயிர் இயக்க நாளத்தை ஒட்டியவாரே தேக சக்தியை கட்டுப் படுத்தும் நரம்புகள் அமைந் துள்ளது. ஹெல்மெட் போடும் போது ஏற்படும் அழுத்த த்தால், இந்த அத்தனை நாளங்களும் அதிக பளுவை சுமக்கிறது. 

ஒவ்வொரு முறை அழுத்தம் அதிகரிக்கும் போதும் மேற்கண்ட அத்தனை நாளங்களும் படிப்படியாக சேத மடைகிறது. இதனால் நாளடைவில் கழுத்து, பிடறி, முழங்கை, தோள்பட்டை, மூட்டு ஆகிய பகுதிகளில் வலி ஏற்படும். 

ஆனால் பெரும் பாலானவர்கள் இது பைக்கை தொடர்ந்து ஓட்டுவதால் ஏற்படுகிறது என்ற எண்ணத்தில் உள்ளனர்.

சாதாரணமாக பைக் ஓட்டும் போது ஏற்படும் வலிக்கும், சக்தி நாளங்கள் பாதிப் படைந்தால் ஏற்படும் வலிக்கும் ஏராளமான வித்தி யாசங்கள் உள்ளது. 
ஹெல்மெட் அணியாவிட்டாலும் ஆபத்து


இது தவிர ஹெல்மெட் பக்கவாட்டுகள் காதுகளை அழுத்தும். அப்போது காதுகளின் கேட்கும் திறன் நாரம்புகளில் வழக்கத்திற்கு மாறான அழுத்தங்கள் ஏற்பட்டு, பிற்காலத்தில் கேட்கும் திறனை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

இது தவிர நரம்பு பாதித்து காதுகளில் சீழ் வடியும் நிலையும் வரலாம். அவ்வாறு ஒரு முறை பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதை குணப் படுத்துவது மிகவும் சிரமமானது. 

தலையின் பக்க வாட்டில் பித்தப்பை சக்தி நாளங்கள் உள்ளது. இதில் ஏற்படும் அழுத்தம் காரணமாக தலைவலி, மயக்கம், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

மேலும் கோடை காலங்களில் கடுமையான வெயிலில் ஹெல்மெட் பயன் படுத்துவதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக ரத்த நாளங்கள் மற்றும் தலையில் உள்ள சக்தி நரம்புகள் அதிகம் பாதிக்கப் படுகிறது.

இதனால் ஹெல்மட் அணியாத போதும் தலைவலி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

இவற்றிற்கு சிகிச்சைகள் அளிக்க முடியும் என்றாலும், ஒரே அடியாக நோய் பாதிப்பு பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. படிப்படியான மருத்துவமுறை மூலமாகவே இதை மேலும் அதிகமாகாமல் தடுக்க முடியும்.

ஹெல்மெட் அணிந்தாலும் பிரச்னையா? என்ன செய்வது?
ஹெல்மெட் அணிந்தாலும் ஆபத்து


மேற்கண்ட பிரச்னைகளை தவிர்க்க வாகன ஓட்டிகள் முதற் கட்டமாக அதிக எடை இல்லாத ஹெல்மட்களை பயன்படுத்த வேண்டும்.

இது தவிர அவரவர் தலைக்கு ஏற்றவாறான அளவில் ஹெல்மட்களை வாங்கி பயன்படுத்துவது மிகச்சிறந்து. 

மேலும், வாகனம் ஓட்டும் நேரம் தவிர, சிக்னல் உள்ளிட்ட இடங்களில் நிற்க நேரிட்டால் அப்போது ஹெல்மெட்டை சிறிது நேரம் கழற்றி பின்னர் போட்டுக் கொள்ளலாம். 

இன்றைக்கு பல பைக் ஓட்டிகள் செய்யும் மிகப்பெரிய தவறு ஹெல்மெட்டில் செல்போனை வைத்து பேசுவது தான். ஹெல்மெட் அணிபவர்கள் கட்டாயம் இதுபோன்ற செயலை தவிர்க்க வேண்டும். 

என்னாய்யா இது ஹெல்மெட் அணியாவிட்டாலும் பிரச்னை, அணிந்தாலும் பிரச்னை என்றால் நாங்கள் என்ன தான் செய்வது என புலம்புகிறீர்களா.

என்ன செய்வது, எல்லா விஷயத்துலேயும் நல்லது, கெட்டது என இரண்டுமே இருக்கும் என மனச தேத்திக்கோங்க...
Tags:
Privacy and cookie settings