உடலில் உள்ள வியர்வைக்கு எளிய தீர்வு !

வியர்வை, துர்நாற்றம் பிரச்னை உள்ளோர் ஆன்டி பாக்டீரியல் சோப்பைப் பயன் படுத்தலாம். சருமத்தில் நல்ல கிருமிகளும் இருக்கும் என்பதால், வீரியம் மிக்க ஃபேஷ் வாஷ் மற்றும் சோப்களைத் தவிர்ப்பது நல்லது. 
வியர்வைக்கு எளிய தீர்வு


நல்ல கிருமிகள் நீங்கி விட்டால், கெட்ட கிருமிகள் அதிகம் பரவி, சருமத்தைப் பாதிக்கலாம்.

வெளியில் சென்று விட்டு வருபவர்கள், முதலில் க்ளென்சரால் முகத்தில் உள்ள அழுக்கு, தூசுக்களை நீக்க வேண்டும். க்ளென்சர் அழுக்கு, தூசை நீக்குமே தவிர, 

முகத்துக்குப் புத்துணர்வு தராது. மேலும், வழவழப்பும் முகத்தில் ஒட்டி இருக்கும் என்பதால், க்ளென்சிங் செய்த பிறகு, ஃபேஸ் வாஷ்கொண்டு முகத்தைக் கழுவிவிட வேண்டும்.

பருக்கள் நிறைந்த சருமத்துக்கு ஆக்னி ப்ரோன் (Acne prone) ஃபேஸ் வாஷ் சிறந்தது. பருக்கள் கொண்ட முகம் உடையவர்கள், ஸ்கரப் கீரீம்களைப் பயன்படுத்தக் கூடாது. 


குளிர்ந்த அல்லது மிதமான நீரில் முகம் கழுவுவது நல்லது. மிகவும் சூடான நீரில் முகம் கழுவக் கூடாது. அடிக்கடி நீரில் முகத்தைக் கழுவினால், எந்தவிதத் தொற்றுகளும் தூசுகளும் சருமத்தை அண்டாது.

ஒரு நாளைக்கு மூன்று முறை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். முகத்தைக் கழுவிய பிறகு, சன் ஸ்கிரீன் அல்லது மாய்ஸ்சரைசர் என அவரவர் சருமத்துக்கு ஏற்ற கிரீம்களைப் பூசிக்கொண்டு வெயிலில் செல்லலாம்.
Tags:
Privacy and cookie settings