நம்மிடம் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க !

நோயற்ற வாழ்வு தான் குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆம், இது நூறு சதவீதம் உண்மை. வாழ்க்கை யின் கடைசி நாட்களில் மருத்துவ மனையில் அந்த பிடிக்காதா வாடையை சுவாசித்துக் கொண்டு, 
நோய் தொற்று


ஊசிகளின் குடைச்சலில் உயிரை கையில் படித்துக் கொண்டு நரக கொடுமை களுக்கு மத்தியில் வாழ்வதற்கு இறந்தே விடலாம் என்று தான் அனைவரும் எண்ணுவார்கள்.

இப்படிபட்ட சிரமமான வாழ்க்கையை தவிர்த்து, நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் எனில் நீங்கள் சில பழக்கவழக்கங்களை மறக்காமல் அன்றாடம் பின்பற்ற வேண்டும்....

சாப்பிடு வதற்கு முன்னரும், பின்னரும் கையை கழுவ வேண்டும்.

அதே போல சமைக்க ஆரம்பிக்கும் போதும் கூட கைகளை நன்கு கழுவிய பிறகு ஈடுபட வேண்டியது அவசியம்.

மூக்கை நோண்டுவது மிகவும் கெட்ட பழக்கம். இதனால் நிறைய நச்சு கிருமிகள் தொற்று ஏற்படுகிறது.

தினமும் காலை எழுந்ததும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இது உங்கள் தசைகள் இலகுவாக உணரவும், சிறந்து செயல்படவும் உதவுகிறது.

கெட்ட பழக்கம்


மூச்சு விடு வதிலேயே நிறைய பேர் தவறு செய்கிறார்கள். யாருமே, நுரையீரல் நிரம்பும் படி இழுத்து, முழுக்க மூச்சு விடுவதில்லை. மூச்சு பயிற்சியில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

காலை உணவில் பிரெட், பிஸ்கட் என கண்டதை உண்ணாமல், பழங்கள், முட்டை, பால் என ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட துவங்குங்கள்.

வாரம் தவறாமல் நகம் வெட்ட வேண்டியது அவசியம். நகத்தில் சேரும் அழுக்குகள் மூலமாக தான் நிறைய கிருமிகள் நமது உடலுக்குள் சாப்பிடும் போது செல்கிறது.

ஷேவிங் ரேசர், டூத்பிரஷ், நகம் வெட்டும் கருவி போன்ற வற்றை கூட மற்றவர் களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டா,. இதன் மூலமாகவும் நச்சு கிருமிகள் பரவ வாய்ப்புகள் இருக்கின்றன.
குளிர் காலத்தில் வியர்வை


கரும்பு சர்க்கரை, பனக்கற் கண்டு போன்றவை உடலுக்கு நல்லது. ஆனால், வெள்ளை சர்க்கரை மற்றும் செயற்கை இனிப் பூட்டிகள் உடலுக்கு மிகவும் தீங்கு விளை விக்கக் கூடியவை.

எனவே, இவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும். குளிர் காலத்தில் வியர்வை அதிகம் வர வாய்ப் பில்லை.

ஆனால், பொது வாகவே வாக்கிங், ஜாக்கிங், உடல் வேலை போன்ற வற்றில் ஈடுபட்டு வியர்வை வெளியேறும் படி ஏதாவது செயலில் ஈடுபட வேண்டும்.

எட்டு மணி நேரம் உறக்கம் என்பதை விட, எந்த எட்டு மணி நேரம் நீங்கள் தூங்க வேண்டும் என்பது முக்கியம். அதிக பட்சம் இரவு 9 மணிக்கு தூங்கி 5 மணிக்கு எழுவது இறந்த நேரம் எனப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings