இந்திய பெண்களின் விலை 1 லட்சம் !

ஆந்திராவில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளம்பெண்களை அங்குள்ள இடைத்தரகர்கள் நிரந்தரமாக அவர்களை பெரும்பணக்காரர்களிடம் விற்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு விற்கப்பட்ட பெண்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர அரசு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

வீட்டு உதவியாளர் பணிகளுக்காக ஆந்திராவிலிருந்து துபாய் நாட்டிற்கு ஏஜென்ட்கள் மூலம் அனுப்பப் படுகின்றனர். இந்த பெண்களை இடைத்தரகர்கள், கடைப் பொருளைப் போல பெரும் பணக்காரர்களுக்கு பெரிய தொகைக்கு விற்று விடுகின்றனர்.

இவ்வாறு விற்கப்பட்டதால் பலர் விசாக்காலம் முடிந்தும் சொந்த ஊர் திரும்ப முடியாமலும், வீட்டுச்சிறையில் அவதிப்பட்டு வருகின்றனர். 

தமிழகத்திலிருந்தும் இப்படி பல அப்பாவிகள் துபாயில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆந்திர அரசிடம் உதவி கேட்டதையடுத்து இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா அரசின் கவனத்துக்கு வந்ததையடுத்து துபாயில் இடைத்தரகர்களிகளிடம் சிக்கியுள்ள பெண்கள் தங்களின் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர அமைச்சர் பல்ல ரகுநாத ரெட்டி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘நமது இந்திய பெண்களை சில இடைத்தரகர்கள் ஏமாற்றி துபாயில் பணிக்கு அனுப்புகின்றனர்.

அவர்கள் அங்கு வீட்டு வேலையில் அமர்த்தப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதில் சிலர் உயிரையும் இழந்துள்ளனர்.

அதிக ஊதியம் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றி, கடைப் பொருளைப் போல அவர்களை விற்றுவிடுகின்றனர். 
சவுதி அரேபியாவில் ரூ. 4 லட்சம் வரையிலும், மற்ற இடங்களுக்கு ரூ. 1 முதல் 2 லட்சம் வரையிலும் இந்திய கிராமப் பகுதி பெண்கள் விற்பனை செய்யப்படுகின்றனர்.

குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் அங்கு சென்று விசா காலம் முடிந்து சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

இதுவரை 25 பெண்களின் உறவினர்கள் தங்களின் பெண்களை மீட்டுத் தருமாறு எங்களிடம் முறையிட்டுள் ளனர்.

எனவே,உடனடியாக தாங்கள் தலையிட்டு அங்கு சிறையில் வாடும் பெண்களை மீட்டு சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெண்கள் வெளிநாடுகளில் விற்கப்படும் அவலம் தடுத்துநிறுத்தப்படவேண்டும்.
Tags:
Privacy and cookie settings