ஜார்ஜியாவில் ஒரு பெண்ணிற்கு அவரது 11 வயது மகன் பிரசவம் பார்த்த அதிசய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள மரியட்டாவில் வசிப்பவர் கென்யார்தா ட்யூக்ஸ்.
இவருக்கு ஏற்கனவே ஜேம்ஸ் ட்யூக்ஸ் என்ற 11 வயது மகன் இருக்கிறான். இந்நிலையில் கென்யார்தா இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார்.போன வாரம் கென்யார்தாவின் கணவர் வேலைக்கு சென்றுவிட்டார்.
வீட்டில் ஜேம்ஸும், கென்யார்தாவும் தான் இருந்துள்ளனர். அப்போது, கென்யார்தாவுக்கு திடீர் என்று பிரசவ வலி ஏற்பட்டது. வேறுவழியின்றி, ஜேம்ஸ் தனது தாய்க்கு பிரசவம் பார்த்துள்ளான்.
ஜேம்ஸின் உதவியுடன் கென்யார்தா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஜேம்ஸின் பெற்றோர்கள், அந்த குழந்தைக்கு ராயல் ட்யூக்ஸ் என பெயர் சூட்டியுள்ளனர்.
குழந்தை பிறந்தவுடன் ஜேம்ஸ் 911க்கு போன் செய்து வீட்டில் தம்பி பாப்பா பிறந்துள்ளதாகவும், ஆம்புலன்ஸை அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளான். அதற்கு அவர்கள் சுத்தமான துணியை பயன்படுத்தி குழந்தையின் முகம் மற்றும் உடலை நன்றாக துடைக்குமாறு கூறியுள்ளனர்.
இதுபற்றி கென்யார்தா கூறுகையில், என் மகனின் உதவியில்தான் எனக்கு குழந்தை பிறந்தது. அவன் ஒரு ஏஞ்சல். அவன்தான் என் மருத்துவராக இருந்தான். அவனே என் சூப்பர் ஹீரோ என்றார்.