பெல்ஜியம் நாட்டில் 165 அடி உயரத்தில் அதிசய விருந்து நிகழ்ச்சி !

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்செல்ஸ் நகரில் 165 அடி உயரத்தில் சமைத்து விருந்து படைக்கும் அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரஸ்செல்ஸ் நகரில் அமைந்துள்ள Atomium நிறுவப்பட்டு 10வது ஆண்டை கொண்டாடும் வகையில் வானில் இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆண்டு தோறும் குறிப்பிட்ட மாதத்தில் வானில் விருந்து நிகழ்ச்சி என்ற பெயரில் அந்தரத்தில் விருந்து கொடுத்து விருந்தினர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி வருகின்றனர்.

165 அடி உயரத்தில் செல்லும் இயந்திரத்தில் விருந்தினர்கள் அமர்ந்த உடன் மேஜை அவர்கள் முன் தானாக எழும்பும் படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஒவ்வொரு ஆண்டும் 10 உயர்தர சமையல் நிபுணர்கள் ஒன்றிணைந்து சமைத்து விருந்தினர்களுக்கு பரிமாறி மகிழ்விக்கின்றனர்.

வானில் விருந்து நிகழ்வு இந்த ஆண்டு ஜூன் முதல் திகதி முதல் 5ம் திகதி வரை நடைபெறுகிறது.
இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் கடந்த 2006ம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்த நிகழ்வினை நடத்தி வருபவருமான David Ghyssel கூறுகையில், 
இதுவரை இந்த நிகழ்வில் 56 நாடுகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

இனிவரும் நிகழ்ச்சிகளில் மேலும் பல நாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர் என்றார்.
Tags:
Privacy and cookie settings