மும்பை- புனே எக்ஸ்பிரஸ் தேசிய நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் சிலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சொகுசு பஸ், அடுத்தடுத்து இரண்டு கார்கள் மீது மோதிவிட்டு,
பின்னர் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. ஸ்விப்ட் சொகுசு கார் ஒன்று பஞ்சர் காரணமாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனை பார்த்த, இன்னோவா காரில் வந்தவர்கள், தங்களது காரை அருகில் நிறுத்தி, உதவி செய்தனர். சதாரா பகுதியிலிருந்து வந்த பஸ், இரண்டு கார்கள் மீதும் மோதிவிட்டு, 20 அடி ஆழமுள்ள கால்வாயில் கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் 6 மாத குழந்தை உள்ளிட்ட 17 பேர் பலியானார்கள். காயமடைந்தவர்கள் புனேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.