அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில கடற்கரையில் 18 அடி நீளமான மீனொன்று இறந்தநிலையில் கரையொதுங்கியது. படகோட்ட பயிற்சி நிலையமொன்றின்
மாணவர்களும் கடல்சார் கற்கை நிறுவகத்தின் பயிற்றநர்களும் இம்மீனை ஏந்தியிருப்பதை படத்தில் காணலாம்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த சமுத்திரவியல் விரிவுரையாளரான ஜெஸ்மைன் சான்டனா எனும் பெண், கடற்கரைப் பகுதியில் சுழியோடிக்கொண்டிருந்தபோது இந்த மீனை கண்டுபிடித்தாராம்.
வேளள்ளி போன்ற பொருளென அதை தான் முதலில் கருதியாகவும் ஆனால் அது நீளமான மீன் என அறிந்து ஆச்சரியமடைந்தாகவும் சான்டனா கூறியுள்ளார்.
„அவ்வேளையில் என்னிடம் கெமரா எதுவும் இருக்கவில்லை. இப்படியொரு மீனை நான் கண்டதாகக் கூறினால் எவரும் நம்பமாட்டார்கள். அதனால் அம்மீனை கடலிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என எண்ணினேன்“ என அவர் தெரிவித்துள்ளார.